பெண்களே காதலிக்க போறீங்களா?
Page 1 of 1
பெண்களே காதலிக்க போறீங்களா?
ஒருவரை காதலிக்கிறோம் என்றால், அந்த காதல் உறவு நல்லதா அல்லது கெட்டதா என்பதை விரைவில் தெரிந்து கொள்ள முடியாது. ஏனெனில் காதல் வரும் போது, அந்த நேரத்தில் வெறும் சந்தோஷம் மட்டும் தான் இருக்கும். வேறு எந்த ஒரு எண்ணமும் மனதில் தோன்றாது.
ஏனெனில் காதலில் விழுந்தால், அந்த காதல் கண்ணை மறைப்பதோடு, சிந்திக்கும் எண்ணத்தையும் மறைத்துவிடும். அவ்வாறு மறைத்துவிடுவதால் தான், காதல் தோல்விகள் ஏற்படுகின்றன. அந்த உறவு கெட்டதாக இருந்தால், என்னென்ன அறிகுறிகள் இருக்கும் என்பதைப் பார்ப்போமா!!
* நீங்கள் காதலிக்கும் வாழ்க்கைத்துணை சுயநலத்துடன் இருந்தால், அவர்களை ஆரம்பத்திலேயே தவிர்ப்பது நல்லது. சுயநலத்துடன் இருப்பவர்கள், எப்போதும் தன்னைப் பற்றி, தனக்கு பிடித்தது, பிடிக்காதது பற்றி தான் பேசுவார்கள். அவ்வாறு பேசுபவர்கள், பிற்காலத்தில் தனக்கு பிடிக்கவில்லை என்றால் விட்டுச் சென்று விடுவார்கள் என்பதில் ஆச்சரியமில்லை. ஆகவே சுயநலம் இருந்தால் காதல் வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதைப் புரிந்து, அத்தகையவர்களை தவிர்ப்பது நல்லது.
* நிறைய ஆண்கள் தாம் காதலிக்கும் நாம் பெண்கள் சொல்வதை கேட்டு நடக்க வேண்டும் என்று ஆசைப்படுவர். ஒருவர் மற்றவரை எதற்கெடுத்தாலும் கட்டுப்படுத்துவதோ, எதை செய்தாலும் அனுமதி பெற்றுக் கொண்டு செய்வதோ இருந்தால், அந்த காதல் நீண்ட நாட்கள் நிலைக்காது. விரைவில் முறிந்து கொண்டு போகும். அதிலும் ஒரு அன்பான உறவில் இருவரும் சரிசமமாக நடத்தப்பட வேண்டும். ஆகவே அத்தகைய நடவடிக்கையை உங்கள் வாழ்க்கைத்துணை மேற்கொண்டால், விலகிக் கொள்வது மிகவும் சிறந்தது.
* உங்கள் துணை எப்போது உங்களை அளவுக்கு அதிகமாக கட்டுப்படுத்த ஆரம்பிக்கிறார்களோ, அப்போது உஷாராகிவிட வேண்டும். இது ஒரு கெட்டவிதமான உறவுக்கு அறிகுறி. ஆதிக்கம் என்பது வேறு, முழுமையாக கட்டுப்படுத்துவது என்பது வேறு. உதாரணமாக, இப்போது உங்கள் துணை நண்பர்கள், பேசுவது, பழக்கவழக்கம், உடை, உங்கள் நேரம் போன்றவற்றில் கட்டுப்படுத்தினால், அது ஒரு அழகான உறவுக்கு ஏற்படுத்தும் ஒருமாதிரியான அசிங்கம். கட்டுப்பாடு இருக்க வேண்டியது தான். ஆனால் அதுவே அளவுக்கு அதிகமானால், அவர்களைத் தவிர்ப்பது தான் நல்லது. வாழ்க்கை வாழ்வதற்கு தான்.
* காதலிக்கும் வாழ்க்கைதுணையின் வாழ்க்கையில் 2-3 வெற்றியடையாத காதல் இருந்தால், அதுவும் ஒரே காரணத்திற்காக தோல்வியடைந்தால், அப்போது மிகவும் உஷாராக இருக்க வேண்டும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நேரமில்லை காதலிக்க...
» வேலைக்கு போறீங்களா?.. குழந்தைகளையும் கவனிங்க!
» குதிகால் செருப்பு வாங்க போறீங்களா?
» பெரிய நடிகையாக இருந்தும் பந்தா இல்லை: சினேகாவின் எளிமை காதலிக்க தூண்டியது நடிகர் பிரசன்னா பேட்டி
» ஜிம்முக்கு போறீங்களா?
» வேலைக்கு போறீங்களா?.. குழந்தைகளையும் கவனிங்க!
» குதிகால் செருப்பு வாங்க போறீங்களா?
» பெரிய நடிகையாக இருந்தும் பந்தா இல்லை: சினேகாவின் எளிமை காதலிக்க தூண்டியது நடிகர் பிரசன்னா பேட்டி
» ஜிம்முக்கு போறீங்களா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum