கும்பாபிஷேகம் செய்வதன் பொருள் என்ன?
Page 1 of 1
கும்பாபிஷேகம் செய்வதன் பொருள் என்ன?
கும்பாபிஷேகம் செய்வதன் பொருள் என்ன?
கும்பாபிஷேகம் செய்யும்போது கும்பத் தீர்த்தத்தில் இறைவனை ஆவாகனம் செய்து, யாகத்தின்மூலம் மந்திரம் ஜெபித்து சக்தியை உருவேற்றி, அந்தக் கும்பத் தீர்த்தத்தை இறை பிம்பத்திலும் கோபுர கலசங்களிலும் அபிஷேகம் செய்வர்.
கடவுளின் உடலாகக் கும்பத்தையும், அதன் மேல் சுற்றப்பட்ட நூல் 72,000 நாடி நரம்புகளையும், உள்ளே ஊற்றப்பட்ட நீர் ரத்தமாகவும், அதனுள் போடப்பட்ட தங்கம் ஜீவனாகவும், மேலே வைக்கப்பட்ட தேங்காய் தலையாகவும், கும்பத்தின் கீழ் பரப்பப்பட்ட தானியம் ஆசனமாகவும் பாவித்து; வஸ்திரம், சந்தனம், பூக்கள் ஆகியவற்றைக் கொண்டு அலங்காரம் செய்து யாக மேடையில் அமைப்பது வழக்கமாகும்.
சாதாரண கும்பமானது மந்திர சக்தியால் உயர்கலசமாக மாறுகிறது. கும்பாபிஷேகத்தால் ஆலயத்தின் இறைசக்தி பன்மடங்கு பெருகுகிறது. கும்பாபிஷேகம் ஆவர்த்தம், அனுவர்த்தம், புனஸ்வர்த்தம், அந்தரிதம் என நான்கு வகைப்படும்.
* தெய்வ மூர்த்தங்களையும் கோவிலையும் புதிதாக அமைத்து நிர்மாணம் செய்வது ஆவர்த்தம் எனப்படும்.
* கோவிலோ, தெய்வ மூர்த்தங்களோ வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்டால், அவற்றை மறுபடி அமைப்பது அனுவர்த்தம் என்று சொல்லப்படும்.
* ஆலயம் பழுதடைந்துவிட்டால் அதற்கு அஷ்டபந்தன மருந்து சாற்றி, மீண்டும் புதுப்பிப்பது புனஸ்வர்த்தம் ஆகும்.
* கள்வர்களால் அபகரிக்கப்பட்ட மூர்த்திகளை மீண்டும் பிரதிஷ்டை செய்வது அந்தரிதம் என்று சொல்லப்படும்.
gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» சுப்ரபாதம் என்பதன் பொருள் என்ன?
» சுப்ரபாதம் என்பதன் பொருள் என்ன?
» சுப்ரபாதம் என்பதன் பொருள் என்ன?
» ஸ்ரீ மஹாலஷ்மியை தோத்திரம் செய்வதன் மூலம் சர்வ கார்ய ஸித்திகள்
» உடற்பயிற்சி செய்வதன் மூலம் ....
» சுப்ரபாதம் என்பதன் பொருள் என்ன?
» சுப்ரபாதம் என்பதன் பொருள் என்ன?
» ஸ்ரீ மஹாலஷ்மியை தோத்திரம் செய்வதன் மூலம் சர்வ கார்ய ஸித்திகள்
» உடற்பயிற்சி செய்வதன் மூலம் ....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum