சனி நீங்கும் போது செய்ய வேண்டியவை
Page 1 of 1
சனி நீங்கும் போது செய்ய வேண்டியவை
ஏழரைச் சனி நீங்கும் போது அந்த ராசிக்காரர்கள் அன்றைய தினம் புண்ணிய நதிகள், சமுத்திரம், நீர்த்தடாகங்கள், குளம் போன்றவற்றில் நீராட வேண்டும். இயலாதவர்கள் வீட்டில் உள்ள கிணற்றில் குளிக்கலாம். சமுத்திர ஸ்நானம் செய்யாதவர்கள் நல்லெண்ணை தலையில் வைத்து குளிப்பது சிறப்பு. குலதெய்வ வழிபாடு செய்த பின்பு சிவதரிசனம் செய்ய வேண்டும். இயன்றவர்கள் நவக்கிரக சூக்தம் ஜெபம் செய்யலாம். ஏழைகளுக்கு அன்னதானம் வழங்க வேண்டும். பசுவிற்கு அகத்திக்கீரை உண்ணத் தருவது மிகவும் சிறப்பு.
சனீஸ்வர தீபம்.......
முக்கூட்டு எண்ணெய் (நல்லெண்ணை, நெய், இலுப்பை எண்ணெய்)யினால் ஓர் இரும்புச் சட்டியில் வெள்ளை, கறுப்பு, சிவப்பு வண்ண நூல்களைத் திரியாக இட்டு மேற்கு திக்கில் தீபம் ஏற்றி வர வேண்டும். இதற்கு சனீஸ்வர தீபம் என்று சித்தர்கள் கூறுவர்.
இந்தத் தீபத்தைச் சனி பகவான் சன்னதியிலும் ஏற்றலாம். இந்த தீபத்தை ஏற்றி நீலோற்பல மலர் - நீலசங்கு புஷ்பம், வன்னி, இலை, வில்வ இலைகளால் தீபத்தைப் பூஜித்து சனி பகவானைச் சாந்தி பரிகாரம் செய்யலாம். இந்த தீப பரிகாரம் தாங்க முடியாத சனி பகவானின் இன்னலிருந்து விடுவித்து சாந்தியையும் மகிழ்ச்சியையும் அளிக்கும்.
புஷ்பாஞ்சாலி....
சனி பகவானுக்கு வன்னி மலர் மற்றும் நீலோற்பல மலர் மிகவும் விருப்பமானது. சனி பகவானுக்கு உரிய சனிக்கிழமையில் மேற்கண்ட இருவகை புஷ்பங்களைச் சனி பகவானுக்குச் சாத்தி வணங்கலாம்.

gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» கிரகண காலத்தில் செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை
» நடைபயிற்சியின் போது கவனிக்க வேண்டியவை
» லிப்ஸ்டிக் போடும் போது கவனிக்க வேண்டியவை
» நடைபயிற்சியின் போது கவனிக்க வேண்டியவை
» ஸ்கிப்பிங் பயிற்சி செய்யும் போது கவனிக்க வேண்டியவை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum