வடிவேலுக்கு எதிராக அதிமுக சார்பில் களம் இறங்கும் சிங்கமுத்து
Page 1 of 1

தேர்தல் மேடைகள் மகா மோசமாக நாறப் போகின்றன எதிர் வரும் நாட்களில். இது நாள் வரை வடிவேலு மட்டும்தான் குண்டக்க மண்டக்க பேசி விஜயகாந்த்தை வறுத்தெடுத்து வந்தார். இப்போது அதே வைகை மண்ணிலிருந்து வடிவேலுவுக்கு எதிராக ஒருவர் வரிந்து கட்டிக் கொண்டு கிளம்பியுள்ளார் – அவர் வடிவேலுவின் பரம எதிரியாக சில மாதங்களுக்கு முன்பு மாறிய நடிகர் சிங்கமுத்து. இவரும் காமெடி நடிகர்தான்.
எப்படி வடிவேலு, விஜயகாந்த் தனிப்பட்ட சண்டை நாடறிந்ததோ, அதை விட பிரபலமானது வடிவேலு -சிங்கமுத்து சண்டை. இது வாய்க்காச் சண்டை என்றால் இது வரப்புச் சண்டை. சுடுக்காட்டைக் கூட மோசடியாக என் தலையில் கட்டி விட்டார் சிங்கமுத்து, ரூ. 7 கோடி வரை மோசடி செய்து விட்டார் என்று போலீஸ் நிலையப் படியேறி பரபரப்பை ஏற்படுத்தினார் வடிவேலு சில மாதங்களுக்கு முன்பு.
இதையடுத்து வடிவேலு மனுசனே கிடையாது. மகா மோசமானவர், அடுத்தவங் நல்லாருக்கிறது அவருக்குப் பிடிக்காது, பொறாமை பிடிச்ச மனுசன் என்று சரமாரியாக புகார்களை அடுக்கினார் சிங்கமுத்து.
இவர்களின் சண்டை உச்சத்திற்குப் போனது. இதில் சிங்கமுத்து மோசடி செய்தது உறுதியானதால் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த நிலையில் விஜயகாந்த்துடனான தனது மோதலுக்குப் பழி தீர்ப்பதற்காக திமுக மேடைகளைப் பயன்படுத்தி சரமாரியாக அவரை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார் வடிவேலு. லூஸு லூஸு, என்று வாய் வலிக்க கூறி வருகிறார்.
இந்த நிலையில் வடிவேலுவுக்கு எதிராக சிங்கமுத்து கிளம்பி விட்டார். நேற்று அதிரடியாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்து அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதாக கூறி ஆசி பெற்றார் சிங்கமுத்து.
முன்னதாக இவர் தேமுதிக சார்பில் மேடையேறுவார் என்று கூறப்பட்டது. ஆனால் அதிமுக சார்பில் தற்போது மேடையேறவுள்ளார்.
வடிவேலுவுக்குப் போட்டியாக சிங்கமுத்துவும் தாறுமாறாகப் பேசுவார் என்று தெரிகிறது. வடிவேலுவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மிகக் கடுமையாக விமர்சனம் செய்ய சிங்கமுத்து தயாராகி விட்டார் என்றும் தெரிகிறது.
எனவே வரும் நாட்களில் பெண்கள் யாரும், இவர்களது பிரசாரக் கூட்டங்களுக்குப் போக முடியாத அளவுக்கு ‘வாயாட்டம்’ ஜாஸ்தியாகலாம் என்று எதிர்பார்க்கலாம். ஒரு படத்தில் ‘தீப்பொறி’ திருமுகமாக வடிவேலுவும், ‘நெருப்பு’ நீலமேகமாக சிங்கமுத்துவும் நடித்திருப்பார்கள். இப்போது நிஜமாகவே இருவரும் எதிரும் புதிருமாக பட்டையைக் கிளப்பத் தயாராகி விட்டனர்.
வேணாம்,வலிக்குது, அழுதுருவேன் என்று வடிவேலு புலம்பாமல் இருந்தால் சரி!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விஜயகாந்தை விமர்சிக்க வடிவேலுக்கு தகுதியில்லை! – சிங்கமுத்து ஆவேசம்
» புதிய முயற்சியில் களம் இறங்கும் சித்தார்த்…!!
» அதிமுக-விற்கு எதிராக செயல்படும் விஜய் மக்கள் இயக்கத்தினர் டிஸ்மிஸ் செய்யப்படுவர் – எஸ்.ஏ.சந்திரசேகர்
» கேரளாவில் கவிதைத் திருவிழா: தமிழகம் சார்பில் நா.முத்துக்குமார் பங்கேற்கிறார்
» சென்னையில் இயக்குனர் சங்கம் சார்பில் நட்சத்திர கலை விழா: ரஜினி, கமல் பங்கேற்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum