தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஒருவனுக்கு ஒருத்தி': அந்த கட்டுப்பாடு - இனி தட்டுப்பாடு

Go down

ஒருவனுக்கு ஒருத்தி': அந்த கட்டுப்பாடு - இனி தட்டுப்பாடு Empty ஒருவனுக்கு ஒருத்தி': அந்த கட்டுப்பாடு - இனி தட்டுப்பாடு

Post  meenu Mon Jan 21, 2013 1:40 pm

'ஒருவனுக்கு ஒருத்தி' என்பது நமது கலாசாரம், பெருமை, பாரம் பரியப் பண்பாடு. மனைவி அல்லது கணவன் இருக்கும்போதே இரண்டாவது திருமணம் செளிணிவதை நமது சமூகம் இன்னும் இயல்பாக ஏற்கவில்லை. அதிலும், ரகசியமாக வெளியே உறவு வைத்துக்கொள்வதை சகித்துக்கொள்ள முடியாத குற்றமாகவே கருதுகிறோம்.

காலம் முழுவதும் ஒரே இல்வாழ்க்கைத் துணை என்ற 'பழைய' கருத்து சரிதானா என்ற சிந்தனை தற்போது மேலைநாடுகளில் வலுப்படத் தொடங்கியிருக்கிறது. நாம் நினைப்பதைப் போல் எல்லாம் மேலைநாடுகளில் இரண்டாவது துணையை சகஜமாக ஏற்றுக்கொள்வதில்லை.

அமெரிக்கர்களில் 90 சதவீதம் பேரும், இங்கிலாந்துக்காரர்களில் 80 சதவீதம் பேரும் திருமணத்துக்கு வெளியிலான உறவு ரொம்பத் தப்பு என்று கடும் கண்டனம் தெரிவிக்கிறார்கள். கட்டிய மனைவிக்கு (அல்லது கணவனுக்கு) உண்மையாயிருக்கμம் என்று உறுதிபடத் தெரிவிக்கிறார்கள். அதேநேரம், இந்த நாடுகளில்தான் உலகிலேயே விவாகாரத்துகள் அதிகம்.

அமெரிக்கா, இங்கிலாந்துடன் ஒப்பிடுகையில் இத்தாலி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் ஐந்தில் இரண்டு பேர்தான் 'வெளி உறவு' தவறு என்கிறார்கள். இந்த நாடுகளில் விவாகரத்து என்பது சற்று அபூர்வமான விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக, நீதி இதுதான்: ரொம்பவும் இறுக்கிப் பிடிக்காமல், கொஞ்சம் 'கண்டும் காணாமலும்' போகிற போது குடும்ப வாழ்க்கை சுமூகமாகச் செல்கிறது.

இது மாதிரியான சிந்தனை நம் நாட்டுக்கு எந்த அளவு சரிப்பட்டு வரும் என்பது விவாதத்துக்குரிய விஷயம். ஆனால் மேலைநாடுகளில் இந்த நோக்கில் சிந்திக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த விஷயத்தை அலசும் படங்களும், புத்தகங்களும் அங்கு வரவேற்புப் பெறத் தொடங்கியுள்ளன.

அப்படியரு புதிய புத்தமான 'ரீரைட்டிங் ரூல்ஸ்' (விதிகளை மாற்றி எழுதுதல்) ஆசிரியரும், உறவுகள் ஆலோசகருமான மெக் பார்க்கர் என்ற பெண்மணி விளக்குகிறார்... ''முதலாவதாக, தற்போது மனிதர்களின் ஆயுட்காலம் அதிகமாகிவிட்டது. எனவே ஒரே உறவில் நீண்டகாலம் நீடித்திருப்பது என்பது மலை மாதிரியான விஷயமாகத் தோன்றுகிறது.

இரண்டாவது விஷயம், எதிர்பார்ப்புகள் மாறியிருக்கின்றன. முந்தைய தலைமுறைகளுடன் ஒப்பிடும்போது, இன்றைய கணவன், மனைவி தத்தமது துணையிடம் இருந்து ரொம்பவே எதிர்பார்க்கிறார்கள். அன்பு, அக்கறை, காதல், செக்ஸ், குழந்தைகள், பொருளாதார பலம் எல்லாமே திருமணத்தில் இருந்து கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறோம்.

உண்மையில் இதையெல்லாம் நிறைவேற்றுவது ரொம்பவே கஷ்டமான விஷயம்'' என்கிறார். இல்லறம் என்ற ஒன்றுக்குள் பல விஷயங்களைப் போட்டு மூச்சுத் திணற வைப்பதாகப் பலரும் நினைக்கிறார்கள். இன்றைய திருமண உறவுகள் குறித்து அலசும் மற்றொரு நூலை எழுதியிருக்கும் கேத்தரீன் ஹக்கீம், ''மணமுறிவுகள் குறைவாக உள்ள பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளில் கணவன், மனைவி இடையே பெரிய எதிர்பார்ப்புகள் இல்லை.

உனக்காக நான். எனக்காக மட்டுமே நீ என்று அவர்கள் கறார் காட்டுவதும் இல்லை'' என்கிறார். திருமணம் என்கிற கண்ணாடிப் பாத்திரத்தை ரொம்பவே இறுக்கிப் பிடிக்கிறபோதுதான் அது உடைந்து போகிறது என்கிறார் இவர். தமது துணையின் வெளிப் பழக்கம் குறித்து ரொம்ப 'பரந்த மனப்பான்மை'யாக உள்ளவர்களின் திருமண வாழ்க்கை, வழக்கமான அளவு கோலின்படி செம்மையானதாக இல்லாமல் இருக்கலாம்,

ஆனால் அவர்களின் இல்லறம் இனிமையாக, அமைதியாகவே போகிறது. மிக முக்கியமாக, குழந்தைகளுக்குப் பெற்றோரின் அன்பு தொடர்ந்து கிடைக்கிறது. விவாகரத்து செளிணிது பிரியும் கணவனுக்கு ஒரு மனைவி கிடைத்துவிடுகிறாள், மனைவிக்கும் பல வேளைகளில் கணவன் கிடைத்துவிடுகிறார்.

ஆனால் குழந்தைகள்தான் நடுத்தெருவில் விடப்பட்டதைப் போல தடுமாறிப் போகிறார்கள் என்கிறார் கேத்தரீன். திருமணத்தைத் தாண்டிய உறவு பிரான்ஸ் நாட்டில் கண்டுகொள்ளப்படவில்லை என்றபோதும், அதை ஊக்குவிக்கவும் இல்லை. ''பிரெஞ்சுக்காரர்கள் ஒன்றும், திருமண வாழ்க்கையைக் காப்பாற்ற வெளித் தொடர்புதான் சரி என்று கூறவில்லை.

ஆனால் அதேவேளையில், அப்படி ஓர் உறவு ஏற்பட்டால் அதைக் குற்றமாகக் கருதித் தண்டிக்கவும் விரும்பவில்லை'' என்று கேத்தரீன் கூறுகிறார். பிரெஞ்சுக்காரர்களை விட வெளித்தொடர்புகளை அதிகமாக வைத்திருக்கிற அமெரிக்கர்கள்தான் திருமண வாழ்வில் 'துரோகம்', 'ஏமாற்றுதல்', 'நேர்மை யின்மை', 'கைவிடுதல்' போன்ற வார்த்தைகளை அதிகம் பயன்படுத்துகிறார்களாம்.

ஒரே ஒரு துணை என்ற கட்டுப்பாடுதான் குடும்ப அமைப்புக்குப் பாதுகாப்பானது என்று சொல்வதும் அபத்தம் என்கிறார்கள் நிபுணர்கள். ''எப்படி 'பரந்த மன' இல்லறத்தில் ரிஸ்க்குகள் இருக்கின்றனவோ, அப்படி 'ஒரே துணை' திருமண வாழ்விலும் ரிஸ்க்குகள் இருக்கின்றன. அலுப்பு ஏற்படுவது அவற்றில் ஒன்று'' என்கிறார்கள்.

மாறிவரும் சூழலில், இணையம், தொலைக்காட்சி வாயிலாக வீட்டுக்குள் உலகம் வருகிறது, வெளியுலகத் தொடர்புகள் அதிகரித்து வருகின்றன, தனிநபர்களின் விருப்பங்கள், எதிர்பார்ப்புகள் கூடி வருகின்றன. இந்நிலையில் திருமணத்தின் 'புனிதம்' குறித்த கருத்தும் மாறிவருகிறது. நீண்ட நெடுங்காலமாகவே 'ஒருவருக்கு ஒரு துணை' என்பதைத்தான் மனிதகுலம் போற்றியும், வலியுறுத்தியும் வநதிருக்கிறது.

அந்த 'கட்டுப்பாடு' சரிதானா என்று யோசிக்க வேண்டிய நேரம் இது என்கிறார்கள் சில வல்லுநர்கள். குடும்ப உறவிலும் கொஞ்சம் நெகிழ்வுத் தன்மை இருக்கலாம் என்று இவர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள். 'ஒருவனுக்கு ஒருத்தி' பண்பாட்டுக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் இந்தியாவிலும் கள்ள உறவுகளும், விவாகரத்துகளும் அதிகரித்து வருவது வெளிப்படை. நாம் பல விஷயங்களை மனந்திறந்து ஒப்புக் கொள்ளாவிட்டாலும், 'அவை' நடந்துகொண்டேயிருக்கின்றன என்பதை உள்ளூர உணர்ந்திருக்கிறோம் என்பது உண்மை.

குடும்பம் என்ற கட்டுப்பாடு, பெருமையைக் காக்க வேண்டும் என்பது முக்கியம். ஆனால் அதைக் காக்க வேண்டும் என்பதற்காகவே கணவனும் மனைவியும் எதிரிகளாக மாறி, எப்போதும் போர்க்களத்தில் நிற்க வேண்டுமா என்பதும் சிந்தனைக்குரியது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ‘ஒருவனுக்கு ஒருத்தி ரொம்ப கஷ்டம்…!’- இது திருட்டு சிறுக்கி கதை!
» சமந்தா – நான் கோடியில் ஒருத்தி இல்லை
» மும்பையில் குருக்களுக்குத் தட்டுப்பாடு
» குடிநீர் குழாய் உடைந்து சாலையில் வீணாகிறது: திருவள்ளூர் நகராட்சி பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு
» குடிநீர் குழாய் உடைந்து சாலையில் வீணாகிறது: திருவள்ளூர் நகராட்சி பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum