படம் ஹிட்டானால் ஹீரோக்கள் சம்பளத்தை உயர்த்துவதில் தவறில்லை: நடிகர் ஜீவா பேட்டி
Page 1 of 1

ஒரு படம் வெற்றி பெற்றால் அந்த படத்தில் நடித்த நடிகர் தன் சம்பளத்தை உயர்த்துவதில் தவறு ஏதும் இல்லை. இது வெற்றிக்கு கிடைக்கும் பரிசு, என்றார் நடிகர் ஜீவா.
ஜீவா நடித்த கோ படம் வெளியாகியுள்ளது. படம் குறித்த பாஸிடிவ் விமர்சனங்கள் வரத் துவங்கியுள்ள சூழலில், நடிகர் ஜீவா நிருபர்களைச் சந்தித்தார். அவர் கூறுகையில்,
“நான் நடித்துள்ள கோ படம் இன்று திரைக்கு வருகிறது. இதில் நான் பத்திரிக்கை புகைப்படக்காரராகவும், கதாநாயகி கார்த்திகா பத்திரிக்கை நிருபராகவும் நடித்துள்ளோம். ஒரு நாட்டு அரசியலை பத்திரிக்கை உலகம் எப்படி மாற்றுகிறது என்பது தான் கதை.
பொதுமக்கள் மத்தியில் இந்த படத்திற்கு நிச்சயம் நல்ல வரவேற்பு கிடைக்கும். இந்த படத்தால் பொதுமக்களுக்கு பத்திரிக்கையாளர்கள் மீது மதிப்பும், மரியாதையும் ஏற்படும்.
கோ படத்தை அடுத்து என்னுடைய ரவுத்திரம் படம் வெளிவரவுள்ளது. கோகுல் இயக்கியுள்ள இதில் எனக்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்துள்ளார். அதன் பிறகு வந்தான் வென்றான் வெளியாகும். இதை ஆர்.கண்ணன் இயக்கியுள்ளார்.
தமிழ் பட உலகில், பல நடிகர்கள் இணைந்து நடிக்கும் ஒரு ஆரோக்கியமான சூழ்நிலை உருவாகியுள்ளது. ஷங்கரின் நண்பன் படத்தில் விஜய், நான் (ஜீவா), ஸ்ரீகாந்த், சத்யராஜ் ஆகியோர் இணைந்து நடித்து வருகிறோம். `வானம்’ படத்தில் சிம்புவும், பரத்தும் இணைந்து நடித்துள்ளனர். `வேட்டை’ படத்தில் ஆர்யாவும், மாதவனும் இணைந்து நடிக்கிறார்கள்.
பிற நடிகர்களுடன் இணைந்து நடிப்பதில் அனைத்து இளம் கதாநாயகர்களும் ஆர்வம் காட்டுகின்றனர் என்றார்.
ஒரு படம் வெற்றி பெற்றுவிட்டால் உடனே அந்த படத்தின் கதாநாயகன் சம்பளத்தை உயர்த்துவது சரியா என்று கேட்டதற்கு,
கேப்டன் டோணி ஒரு சிக்சர் அடித்தால் உடனே ஒரு விளம்பர படத்தில் ஒப்பந்தமாவது போல்தான் இதுவும். இதை வெற்றிக்கு கொடுக்கும் பரிசாக நினைக்கலாமே. இதில் தவறு எதுவும் இல்லை,” என்று புன்னகைக்கிறார் ஜீவா.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» முதல் மாணவன்' படம் மே மாதம் ரிலீசாகும்: நடிகர் கோபி காந்தி பேட்டி
» ஹீரோக்கள் கையில் சினிமா இல்லை : இயக்குனர் பேட்டி
» ஆண் குழந்தைக்கு தந்தையானார் நடிகர் ஜீவா!
» ஜீவா, த்ரிஷா படம் தொடங்கியது
» ஆர்யா, ஜீவா படம் ட்ராப்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum