தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சிவாஜி, கமல் வாரிசுகள் சினிமாவில் இல்லையா? கருணாநிதி கேள்வி

Go down

சிவாஜி, கமல் வாரிசுகள் சினிமாவில் இல்லையா? கருணாநிதி கேள்வி Empty சிவாஜி, கமல் வாரிசுகள் சினிமாவில் இல்லையா? கருணாநிதி கேள்வி

Post  ishwarya Fri Apr 19, 2013 11:58 am

சிவாஜி, கமல், சிவகுமார் உள்ளி‌ட்டோரின் வாரிசுகள் கூடத்தான் சினிமாவில் இருக்கிறார்கள். என்னுடைய வாரிசுகளின் வளர்ச்சியில் மட்டும் அர்த்தம் கற்பிப்பது ஏன்? என்று முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தொண்டாற்றியும், தொடர்ந்து தியாகங்கள் செய்தும் கட்சியின் தருக்களாக என்னுடைய பிள்ளைகள் அழகிரி, ஸ்டாலின், தமிழரசு ஆகியோர் வளர்ந்துள்ளனர். அவர்களுடைய பிள்ளைகளும் திரையுலகில் பொருளீட்டி புகழ் ஈட்டுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிலர் எனக்கு நண்பர்களாக இருந்து கொண்டே நச்சுக் கணைகள் பாய்ச்சுவதால் உரிய விளக்கத்தை அளிக்க விரும்புகிறேன்.

1945-ம் ஆண்டு முதல் இதுவரையில் 75-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறேன். இதில் அபிமன்யூ, ராஜகுமாரி, பராசக்தி உள்ளிட்ட ஏராளமான படங்களும் அடக்கம். எனக்கும், திரைப்படக் கலைஞர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், இசைவாணர்கள், கவிஞர்கள், தொழிலாளர்கள் அனைவருடனும் இருந்த தொடர்புகளையும், இருக்கின்ற தொடர்புகளையும் திரையுலகத்தினர் தெளிவாகப் புரிந்தவர்கள் என்பதை மறந்திருக்க முடியாது.

கருணாநிதியின் பேரன், பேத்திகள் எல்லாம் சினிமா படம் எடுக்கிறார்களே, எப்படி? எனக் கேள்வி எழுப்பி ஒரு புத்தகத்தில் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. ஏ.வி.மெய்யப்ப செட்டியார் திரைப்படம் எடுத்து, பின்னர் அவருடைய மகன்கள் ஏ.வி.எம். முருகன், ஏ.வி.எம். குமரன், ஏ.வி.எம்.பாலசுப்பிரமணியம், ஏ.வி.எம்.சரவணன், அவருடைய மகன் குகன், மருமகள் நித்யா போன்றவர்கள் எல்லாம் திரைப்படத் துறையிலே இருப்பதும்-நடிகர் சிவாஜிக்குப் பிறகு அவருடைய மகன்கள் ராம்குமார், பிரபு, ராம்குமாரின் மகன் துஷ்யந்த் போன்றவர்கள் திரைப்படத் துறையில் ஈடுபட்டதும், நடிகர் கமல், அவருடைய சகோதரர் சாருஹாசன், மகள் ஸ்ருதி, சுகாசினி, மணிரத்னம், அனுஹாசன் போன்றவர்கள் இந்தத் துறையில் ஈடுபட்டு இருப்பதும், தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி மற்றும் அவருடைய பிள்ளைகள், ஜீவா, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் திரைப்படத் துறையில் ஈடுபட்டுள்ளனர். இவையெல்லாம் மற்றவர்களுக்குத் தெரியாமல் போனது வேடிக்கை. அதுமாத்திரம் அல்ல; கடந்த காலத்தில் எத்தனை படத் தயாரிப்பாளர்கள் படங்களைத் தயாரித்து அதனை முடிக்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டார்கள்; எத்தனை பேர் படம் எடுத்த காரணத்தினாலேயே ஓட்டாண்டியாகி தெருவிலே நின்றார்கள் என்பதையெல்லாம் கவிஞர் கண்ணதாசன் புத்தகமாக எழுதியுள்ளார்.

என் குடும்பத்திலே என்னுடைய பிள்ளைகளோ, பெண்களோ, பேரர்களோ அரசியலிலே ஈடுபட்டால் வாரிசு அரசியல் என்பதற்கும்-திரைப்படத் துறையிலே ஈடுபட்டால் அதற்கு அர்த்தம் கற்பிப்பதற்கும் என்னதான் காரணமோ? ஏன்தான் இந்த நெஞ்செரிச்சலோ?

இவ்வாறு கருணாநிதி அறிக்கையில் கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சிவாஜி பிலிம்ஸ் படத்தில் ரஜினி-கமல்?
» கருணாநிதி தலைமையில் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு பாராட்டு விழா! – ரஜினி, கமல் பங்கேற்பு
» எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் படங்களின் ஒளிப்பதிவாளர் – இயக்குநர் கர்ணன் மரணம்
» பணம் புகழுக்காக நடித்திருந்தால் சினிமாவில் நிலைத்திருக்க மாட்டேன் : கமல் பேட்டி!
» கமல் மகளாக இருந்தாலும் சினிமாவில் நிலைக்க திறமை வேண்டும் -ஸ்ருதி ஹாசன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum