கோபப்படும் கணவரை சமாளிக்க
Page 1 of 1
கோபப்படும் கணவரை சமாளிக்க
• உங்கள் கணவரை பார்க்கும் போது புன்னகை செய்ய மறக்காதீர்கள். நீங்கள் புன்னகை செய்தாலே அடுத்த நொடியில் கோபத்தை மறந்து விடுவார்கள்
• உங்கள் கணவர் தெரியாமல் செய்யும் சிறு சிறு தவறுகளைக் கூட சுட்டிக்காட்டி வாய்க்கு வந்தபடி திட்டாதீர்கள். அவர்கள் தவறு செய்து இருப்பின் நிதானமாக தவறை எடுத்து கூறுங்கள்.
• முக்கிய வேலைகளில் ஈடுபடும் போது அன்பாய் பேச வேண்டுமே தவிர தொந்தரவு செய்வது போல கணவரிடம் பேசி கொண்டே இருக்காதீர்கள். இதனால் கணவர் கோபமடைந்து, உங்களை திட்ட நேரிடும். இதனால் 2 பேரும் டென்ஷன் ஆக வாய்ப்பு அதிகம்.
• கணவர் வேலை முடிந்து வரும் போது அவர்களின் அனுபவங்களை கேட்டு அறிந்து கொள்ளுங்கள். நீங்களும் வேலைக்கு செல்பவராக இருந்தால் அதேபோல நீங்களும் உங்கள் அனுபவங்களை, அவரிடம் பகிர்ந்து கொள்ள மறக்காதீர்கள். அவ்வாறு பகிர்ந்து கொள்வதன் மூலம் தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும்.
• கணவர் செய்யும் சிறு உதவிகளுக்கும் அன்புடன் நன்றி கூறலாம். வாயினால் தெரிவிக்க கூடாது. அதனை சற்று கொஞ்சலாகவும் கணவரை அணைப்பதன் வழியாகவும் நன்றி கூறலாம். ஏதேனும் சிறு தவறு ஏற்படின் தவறுகளுக்காக உடனே மன்னிப்பு கேட்டு கொள்ளுங்கள். இதன்மூலம் கணவரிடம் கோபம் நீடிப்பதை தவிர்க்க முடியும்.
• கணவர் செய்த தவறுகளை மனதில் வைத்து கொண்டு, அதனை குத்தி காட்டி பேச கூடாது. மேலும் சம்பந்தமே இல்லாமல் கணவரின் பெற்றோரையும், குடும்பத்தையும் திட்ட கூடாது. இதனால் கணவரின் மனதில் வெறுப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
• வேலை விடுமுறை நாட்களில் அல்லது நேரம் கிடைக்கும் போது வெளி இடங்களுக்கு கூட்டி செல்லலாம்.
• கணவனும் மனைவியும் பேசும் போது பிடிவாதமாக பேசாமல், விட்டுக் கொடுத்து பேசுங்கள். தனது கருத்தை தெரிவிக்க வாய்ப்பு அளிக்க தவறாதீர்கள். கணவர் செய்தவைகளில் குறை கண்டுபிடிக்காதீர்கள். நன்றாக இருப்பதாக கூறிவிட்டு, மாற்றத்தை சாதூர்யமாக தெரிவிக்கலாம்.
• மற்றவர்கள் முன் கணவரை கேவலமாக பேசுவது, திட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதால், கணவர் மனைவிக்கு இடையே பெரிய இடைவெளி ஏற்பட்டு பிரிவுக்கு இதுவே காரணமாக அமைந்து விடும். சண்டை ஏற்படின் முடிந்தமட்டும் சமாதன கொடியை பறக்கவிட காத்திருக்க வேண்டுமே தவிர, மேலும் சண்டையை வளர்க்க கூடாது. அன்பை வெளிப்படுத்தினால் மகிழ்ச்சியோடு வாழலாம்...
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கணவரை நேசியுங்கள் பெண்களே!
» கணவரை கவர மனைவிக்கு அட்வைஸ்
» ஏமாற்றும் கணவரை கண்டுபிடிப்பது எப்படி?
» பெண்களே உங்கள் கணவரை நம்புங்கள்
» காதல் கணவரை விவாகரத்து செய்தார் ஜோதிர்மயி!
» கணவரை கவர மனைவிக்கு அட்வைஸ்
» ஏமாற்றும் கணவரை கண்டுபிடிப்பது எப்படி?
» பெண்களே உங்கள் கணவரை நம்புங்கள்
» காதல் கணவரை விவாகரத்து செய்தார் ஜோதிர்மயி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum