ரசிகர் மன்றங்களை அஜீத் தொடரக் கோரி போராட ரசிகர்கள் முடிவு
Page 1 of 1
ரசிகர் மன்றங்களை அஜீத் தொடரக் கோரி போராட ரசிகர்கள் முடிவு
ரசிகர் நற்பணி மன்றங்களைக் கலைக்கும் முடிவை நடிகர் அஜீத் மறு பரிசீலனை செய்யக் கோரி அவரது வீட்டை முற்றுகையிட்டுப் போராட சிவகங்கை மாவட்ட அஜீத் ரசிகர் மன்றத்தினர் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து மாவட்டத் தலைவர் கார்த்திகேயன் விடுத்துள்ள அறிக்கையில்,
தமிழ் திரைப்படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்களையும், ரசிகைகளையும் கவர்ந்தவர் நடிகர் அஜித்குமார். இந்தநிலையில் ரசிகர் மன்றத்தை கலைத்துவிட்டதாக நடிகர் அஜித்குமார் தனது 40வது பிறந்தநாளில் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர், ரசிகைகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எந்தவித பலனையும், எதிர்பாராமல் சமூக தொண்டுகளில் அஜித்குமார் ரசிகர் மன்றத்தினர் ஈடுபட்டு வந்தனர். குறிப்பாக தனிமனித ஒழுக்கத்தை அறிவுறுத்தி வந்த அஜித்குமார், சமூகத்தில் நிலவும் பிரச்சினைகளை மையமாக வைத்து அஜித்குமார் மன்றமும் அதேபோல் ஆகிவிடுமோ என சந்தேகப்பட தேவையில்லை.
ஏன் எனில் இந்த மன்றத்தில் உள்ளவர்கள் ஜாதி, மத, இன வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு நலத்திட்டங்களை செய்து வந்தவர்கள் என்பதை இந்தநாடும் அஜித்குமாரும் அறிந்த ஒன்று இந்த நிலையில் இதுபோல அவர் எடுத்து இருக்கும் முடிவை எங்களது சிவகங்கை மாவட்ட அஜித்
குமார் ரசிகர் மன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை.
எனவே அஜித்குமார் முடிவை மறுபரிசீலனை செய்து நற்பணி இயக்கம் தொடர்ந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம். 15 நாட்களில் அஜித் குமார் நல்ல முடிவை அறிவிப்பார் என நம்புகிறோம்.
அறிவிக்காத பட்சத்தில் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து அனைத்து ரசிகர்களும் சென்னை சென்று அவரது இல்லத்தை முற்றுகையிட்டு எங்களது கோரிக்கையை வலியுறுத்துவோம் என்று அவர் அறிவித்துள்ளார்.
நடிகர் அஜீத் தனது ரசிகர் நற்பணி மன்றங்களைக் கலைத்து அறிவித்துள்ளது அவரது ரசிகர்களை பெரும் சோகத்திலும், வேதனையிலும் அதிருப்தியிலும் தள்ளியுள்ளது. இருப்பினும் அவரைத் தொடர்ந்து கொண்டாடப் போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
அதிமுகவில் சேர கோவை ரசிகர்கள் முடிவு
அஜீத்தி முடிவைத் தொடர்ந்து கோவை மாவட்ட நற்பணி இயக்க அவரச ஆலோசனைக் கூட்டம் கூடியது. இக்கூட்டத்தில் அதிமுகவில் இணைவது என்ற முடிவை எடுத்துள்ளனர்.
மன்றத் தலைவர் அசோக்குமார் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து செயலாளரான நாகராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
நடிகர் அஜீத்தின் இந்த அறிவிப்பு கோவை மாட்ட ரசிகர்களின் இதயங்களில் இடி இறங்கியதுபோல் உள்ளது. ரசிகர்கள் ஆழ்ந்த மனவருத்ததில் உள்ளனர். நாங்கள் என்றுமே அஜீத்தின் கட்டளைபடி செயல்படுபவர்கள். அவரது முடிவை மாற்றிக்கொள்ளும்படி நெருக்கடி கொடுக்க மாட்டோம். ஆனாலும் அஜீத்தின் முடிவை கோவை மாவட்ட ரசிகர்கள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடம் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
எங்களுக்கு சென்னையில் இருந்து தொலைபேசி மூலம் தகவல் வந்தது. நற்பணி இயக்கத்தை உடனடியாக கலைத்துவிடும்படி தெரிவித்தனர். நற்பணி இயக்கம் கலைக்கப்பட்டாலும் அஜீத் ரசிகர் மன்றத்தில் நாங்கள் செயல்படுவோம். தலைவர் அஜீத் சொல்லும் வழியில் நடப்போம்.
அவரது படம் வெற்றி அடைய இதுவரை கட்அவுட் மற்றும் பேனர் வைத்தோம். இனியும் அதுபோல் பட்அவுட் வைத்து கொண்டாடுவோம். அஜீத்தின் 50வது படமான மங்காத்தாவிற்கும் இந்த கட்அவுட் மற்றும் பேனர்கள் வைப்போம்.
அனைத்து மன்ற உறுப்பினர்களிடமும் தலா ரூ.20 வீதம் வசூலித்து முறையான இயக்கமாக எந்தவித அரசியல் சாயமும் இன்றி அஜீத்தின் வழியில் நடந்து வந்தோம்.
ரசிகர் மன்றத்தினர் அரசியலில் ஈடுபட விரும்பினால் அவரவர்கள் விரும்பும் கட்சியில் சேர்ந்து கொள்ளலாம். நாங்கள் அதிமுகவில் சேர முடிவு செய்துள்ளோம்.
இதுதொடர்பாக ஆலோசனை கூட்டம் மே 1ஆம் தேதி நடத்த உள்ளோம். இதில் அனைத்து மன்ற நிர்வாகிகளும் கலந்து கொள்வார்கள் என்றார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கோவை விஜய் ரசிகர் மன்றங்கள் கலைப்பு.. திமுகவில் சேர்ந்த ரசிகர்கள்!
» ரசிகர் மன்றங்களைக் கலைத்தது ஏன்? – அஜீத்
» ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் அஜீத் ஆலோசனை!
» படத்தை திரையிடக் கோரி ரசிகர்கள் சாலை மறியல்,ஆர்ப்பாட்டம்
» படத்தை திரையிடக் கோரி ரசிகர்கள் சாலை மறியல்,ஆர்ப்பாட்டம்
» ரசிகர் மன்றங்களைக் கலைத்தது ஏன்? – அஜீத்
» ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் அஜீத் ஆலோசனை!
» படத்தை திரையிடக் கோரி ரசிகர்கள் சாலை மறியல்,ஆர்ப்பாட்டம்
» படத்தை திரையிடக் கோரி ரசிகர்கள் சாலை மறியல்,ஆர்ப்பாட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum