வானம் – திரை விமர்சனம்
Page 1 of 1
வானம் – திரை விமர்சனம்
பிறர் நலனுக்காக வாழச் சொல்லும் அழுத்தமான கதை. ஐந்து பிரச்சினைகளை வெவ்வேறு கதை களத்தில் நகர்த்தி கிளைமாக்சில் ஒரே புள்ளியில் இணைத்து இதயங்களை கனக்க வைக்கிறார் இயக்குனர் கிரிஷ்…
கேபிள் டி.வி. நடத்தும் சிம்பு பணக்கார வாழ்வுக்கு கனவு காண்கிறார். கோடீஸ்வர பெண்ணை ஏழை என்பதை மறைத்து காதலிக்கிறார். அவளுக்காக புத்தாண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்க நாற்பதாயிரம் ரூபாயை திருட துணிகிறார்.
நன்றாக படிக்கும் சரண்யா மகனை கந்து வட்டிக்காரன் இழுத்து போகிறான். கிட்னியை விற்று அவனை மீட்க சரண்யா பட்டணத்து ஆஸ்பத்திரிக்கு வருகிறார்.
ராப் இசை போட்டியில் பங்கேற்க பெங்களூரில் இருந்து சென்னை வரும் பரத்-வேகா ஜோடி விபத்தில் சிக்கிய பெண்ணை மீட்டு அதே ஆஸ்பத்திரிக்கு கொண்டு வருகின்றனர்.
விபசார தொழில் செய்யும் அனுஷ்காவும் கத்தியால் குத்துப்பட்ட தோழியை காப்பாற்ற அங்கு அழைத்து வருகிறார். அதே ஆஸ்பத்திரியில் கிட்னி விற்ற பணத்தை வைத்துக்கொண்டு சிகிச்சை பெறும் சரண்யாவிடம் தொகையை சிம்பு திருடிக் கொண்டு ஓடுகிறார்.
இன்னொருபுறம் நேர்மையான பிரகாஷ்ராஜை தீவிரவாதி என போலீஸ் பிடித்து ஆஸ்பத்திரியில் வைக்கிறது. அந்த ஆஸ்பத்திரியை தகர்க்க தீவிரவாதிகள் வெடிகுண்டு துப்பாக்கிகளுடன் ஊடுருவுகின்றனர்.
அதன்பிறகு நடப்பவை இதயங்களை உலுக்கிபோடும் கிளைமாக்ஸ்…
சிம்பு ஹீரோயிசத்தை மூட்டை கட்டி விட்டு யதார்த்தத்தில் மனதை கெட்டியாக பிடிக்கிறார். காதலிக்காக பணம் திருட போய் போலீசில் மாட்டி படும் அவஸ்தைகள் ரகளை.
ஏழைப் பெண்ணிடம் பணத்தை பிடுங்குவது உதறல். பிறகு மனம் திருந்தி அப்பணத்தை ஆஸ்பத்திரி வார்டு அறையின் முன் போட்டு விட்டு மறைந்து நின்று பார்க்கும்போது விழிகளில் நீர்முட்ட வைக்கிறார்.
சுயநலவாதியாக வரும் பரத் உதாசீனம் செய்த டிரைவரால் தான் காப்பாற்றப்படுவதில் மனம் மாறுவது அழுத்தம். மகன் படிப்புக்காக கிட்னி விற்கும் சரண்யாவும் அவருடன் வரும் கிழவரும் ஜீவன் பாய்ச்சுகின்றனர்.
விலை மாதுவாக அனுஷ்கா கவர்ச்சி படையலிடுகிறார்.பிரகாஷ்ராஜ், சோனியா அகர்வால் கேரக்டர்களும் கச்சிதம். சந்தானம் வி.டி.வி. கணேஷ் சிரிக்க வைக்கின்றனர். ஆரம்ப சீன்கள் வலுவின்றி நகர்கின்றன. பாதிக்குப் பின் விறுவிறுப்புக்கு மாறுகிறது.
ஆஸ்பத்திரியில் நோயாளிகளை காப்பாற்ற சிம்பு, பரத் போராடுவது பதை பதைக்க வைக்கிறது. யுவன்சங்கர் ராஜா இசை, ஞானசேகர், நீரவ்ஷா ஒளிப்பதிவு பக்கபலம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ரா-1 – திரை விமர்சனம்
» கோ – திரை விமர்சனம்
» டூ – திரை விமர்சனம்
» மதுபான கடை – திரை விமர்சனம்
» மிளகா – திரை விமர்சனம்
» கோ – திரை விமர்சனம்
» டூ – திரை விமர்சனம்
» மதுபான கடை – திரை விமர்சனம்
» மிளகா – திரை விமர்சனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum