தேர்தல் முடிவு எதிரொலி: மதுரையிலேயே தங்கிவிட்ட வடிவேலு!
Page 1 of 1

தேர்தல் முடிவு காரணமாக சென்னைக்கு இப்போது வரவேண்டாம் என போலீசார் அட்வைஸ் செய்ததால், நடிகர் வடிவேலு மதுரையிலேயே தங்கிவிட்டார்.
சட்டசபை தேர்தலில் திமுகவின் பிரச்சார பீரங்கியாக, விஜயகாந்த்தை தனிப்பட்ட முறையில் தாக்கி பிரச்சாரம் செய்தார் நடிகர் வடிவேலு. ஆனால் தேர்தலில் திமுக படுதோல்வியடைந்தது.
நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்த போது மரையில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி வீட்டுக்கு வடிவேலு வந்தார். அவரை சந்தித்த பின்னர் 11.30 மணி அளவில் பாண்டியன் ஹோட்டலுக்கு சென்றார். 15 நிமிட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் மத்திய அமைச்சர் அழகிரி வீட்டுக்குச் சென்று, சில நிமிடங்கள் அவரிடம் பேசிவிட்டு புறப்பட்டார்.
அப்போது செய்தியாளர்கள் வடிவேலுவிடம், 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று சொன்னீர்களே எனக் கேட்டனர். அதற்கு பதில் அளித்த அவர், இரண்டு சுற்றுகள் தான் எண்ணப்பட்டுள்ளன. இன்னும் நிறைய சுற்றுகள் உள்ளன. தேர்தல் முடிவுகள் முழுமையாக வரட்டும் என்றார்.
இதுவரை வந்த முடிவுகள் பற்றி சொல்லுங்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு இப்போதைக்கு எதுவும் வேண்டாம் எனக் கூறிவிட்டு சென்றார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் பேட்டி எடுக்க வேண்டும் என்று பாண்டியன் ஹோட்டலை முற்றுகையிட்டதையடுத்து, அவர் செய்தியார்களை சந்திப்பதை தவிர்த்தார்.
வடிவேலு வீட்டை தேமுதிக தொண்டர்கள் சூழ்ந்து கொண்டுள்ளதாகவும், தற்போதைக்கு சென்னை வர வேண்டாம் என்றும் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் வடிவேலுவுக்கு தகவல் அனுப்பப்பட்டது. மேலும் உடனடியாக சென்னை வருவதை வடிவேலு தவிர்க்க வேண்டும் என்றும் போலீசார் கூறினராம்.
இதைத் தொடர்ந்து அவர் மதுரையிலேயே தங்கியுள்ளதாகத் தெரிகிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வடிவேலு புகார் எதிரொலி – சிங்கமுத்து குடும்பத்தோடு தலைமறைவு
» ‘சரி… எல்லாருக்கும் அழைப்பிதழ் வச்சிருவோம்!’ – வடிவேலு முடிவு
» தேர்தல் முடிவு பற்றிய கருத்து : குஷ்புவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!!
» உள்ளாட்சி தேர்தல்… உசுப்பப்படும் வடிவேலு? – மறுபடியுமா…!! அண்ணே பாத்து சூதானமா இருந்துக்கோண்ணே!!!
» விஜயகாந்த் குறித்து அவதூறாகப் பேசிய வடிவேலு மீது தேர்தல் ஆணையம் வழக்கு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum