கோழி சுற்றி விடும் பிரார்த்தனை
Page 1 of 1
கோழி சுற்றி விடும் பிரார்த்தனை
பெரியபாளையத்தம்மன் கோவிலில் பக்தர்கள் மேற்கொள்ளும் பிரார்த்தனைகளில் "கோழி சுற்றி விடும்'' பிரார்த்தனை முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. அதாவது "இது உயிருக்கு உயிர் கொடுக்கும்'' பிரார்த்தனை ஆகும்.
வீட்டில் யாருக்காவது உடல்நலம் சரியில்லை என்றால், அல்லது விபத்து போன்றவற்றில் சிக்கி உயிருக்குப் போராடும் சூழ்நிலை ஏற்பட்டால் உயிர் கொடுப்பதாக பெரியபாளையத்தம்மனிடம் பக்தர்கள் வேண்டிக் கொள்வார்கள். உடல்நலம் சரியானதும் மாடு, ஆடு, கோழி போன்ற ஏதாவது ஒன்றை கோவிலில் விட்டு விடுவார்கள்.
கோழி என்றால் தாயே இந்த உயிரை ஏற்றுக்கொள் என்று சுற்றி விடுவார்கள். ஆடு, கோழிகளை சுற்றி விடும் பிரார்த்தனையை நிறைவேற்றுவதற்கு என்றே பரசுராமர் சன்னதி அருகில் தனி இடம் உள்ளது. அங்கு விடப்படும் ஆடு, கோழிகள் பவானி அம்மனுக்கு சொந்தமானதாக மாறி விடும்.
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை பெரியபாளையம் கோவிலில் உயிர்ப்பலி கொடுக்கும் வழக்கம் இருந்தது. ரத்தம் ஆறாக ஓடும் வகையில் கூட ஆடு, கோழிகள் பலியிடப்பட்டன. உயிர்ப்பலி தடுப்பு நடவடிக்கை மூலம் இந்த வழக்கம் நிறுத்தப்பட்டது.
அதற்கு பரிகாரமாக கோவில் சார்பில் ஒரு கோழியை உயிருடன் சுற்றி விட்டனர். அதைப் பார்த்து பக்தர்களும் ஆடு, கோழிகளை சுற்றி விடத் தொடங்கி விட்டனர். ஆடி மாத சிறப்பு நாட்களில் இங்கு ஏராளமானவர்கள் கோழி சுற்றி விடுவதை காணலாம்.

gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» கோழி சுற்றி விடும் பிரார்த்தனை
» ஊர் சுற்றி வந்த ஓசை
» விஜயலட்சுமியை சுற்றி வரும் வதந்திகள்
» உலகைச் சுற்றி வர எண்பது நாள்கள்
» உலகைச் சுற்றி வந்த கமல்!
» ஊர் சுற்றி வந்த ஓசை
» விஜயலட்சுமியை சுற்றி வரும் வதந்திகள்
» உலகைச் சுற்றி வர எண்பது நாள்கள்
» உலகைச் சுற்றி வந்த கமல்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum