தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

முக்தி தரும் புரட்டாசி சனிக்கிழமை

Go down

முக்தி தரும் புரட்டாசி சனிக்கிழமை Empty முக்தி தரும் புரட்டாசி சனிக்கிழமை

Post  gandhimathi Mon Jan 21, 2013 12:44 pm


புரட்டாசி மாதம் என்றாலே `ஏடுகுண்டலவாடா, வெங்கட்ரமணா, கோவிந்தா கோவிந்தா!' என்ற பக்தி கோஷம் திருப்பதி மலை முழுக்க எதிரொலிக்கும். புரட்டாசி சனிக்கிழமைகளில் இது இரட்டிப்பாக இருக்கும். புரட்டாசி சனிக்கிழமைக்கு இருக்கும் தனித்துவமும் மகத்துவமே இதற்கு காரணமாகும். புரட்டாசி மாத சனிக்கிழமையில் விரதம் இருந்து, மஞ்சள் ஆடை உடுத்தி, பாத யாத்திரையாக திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசிப்பது பேருந்து வசதி இல்லாத அந்த காலத்திலேயே இருந்தது.

சகல வசதிகளும் உள்ள இந்த நாள்களிலும் தொடர்வதுதான் வேங்கடவனின் மகிமைக்கு சான்று. மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்கிறார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஆனால் ஏழுமலையான் எனக்கு உகந்த மாதம் புரட்சி மாதம்தான் அதிலும் சனிக்கிழமைதான் எனக்கு உகந்த நாள் என்கிறார். இதன் பின்னணியில் ஒரு கதை உள்ளது.

அந்த கதை வருமாறு:-

மன்னன் தொண்டைமானுக்கு ஏழுமலையான் மீது மற்றும், பாசமும் அதிகம். எனவே திருவேங்கடவனுக்கு ஆலயம் அமைத்து தினமும் பொன்மலர்களால் அர்ச்சனை செய்வதற்குரிய ஏற்பாடுகளை செய்திருந்தான். அதன்படியே பூஜையும் செய்து வந்தான். ஒருநாள் பூஜையின்போது பொன்மலர்களுக்கிடையே மண்மலர்களும் வந்து விழுவதைக் கண்டான். திடுக்கிட்ட அவன், அவை மண்மலர்கள்தானா எனக் கூர்ந்து நோக்கினான்.

அவை மண்மலர்கள்தான் என்பதை மீண்டும் மீண்டும் பூஜையில் வந்து விழுந்த மலர்கள் சந்தேகமேயில்லாமல் நிரூபித்தன. கதவுகள் அனைத்தையும் மூடி விட்டு மன்னன் மீண்டும் பூஜையைத் தொடர்ந்தபோதும் அவ்வாறே நிகழ்ந்தது. மன்னனின் மனம் குழப்பத்துக்கு உள்ளாகியது. தனது வழிபாட்டில் ஏதேனும் பிழை இருக்குமோ என உள்ளுக்குள் வருந்தினான்.

குருவை என்ற கிராமம் ஒன்றில் பீமய்யா என்ற குயவன் ஒருவன் வாழ்ந்து வந்தான். பிறவியிலேயே அவனுக்கு கால் ஊனம். தனது குலத்தொழிலான மண்பாண்டங்கள் செய்தலை நேர்மை தவறாமல் ஏழுமலையான் மீது அயராத பக்தி கொண்டு செய்து வந்தான். வேங்கடவனும் அவன் பக்திக்கு மெச்சி, தன் திருவுருவத்தை அவனுக்கு கனவில் காட்டி பின்பு மறைந்து விட்டார்.

பீமய்யாவுக்கு திருமால் கனவில் காட்சியளித்த நாள், புரட்டாசி மாத சனிக்கிழமை விடியற்காலை நேரம். பீமய்யாவும், தனது கனவில் தோன்றிய திருமாலின் வடிவத்தை அப்படியே செய்தான். அதன்பின்னர் மண்ணால் ஏழுமலையானின் உருவத்தை வடித்து, மலர்கள் தூவி வழிபட்டு வந்தான். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை நாளில் தவறாமல் விரதம் அனுசரித்து வந்த பீமய்யன், பெருமாளின் சிந்தனையிலேயே தொழிலையும் செய்து வந்தான்.

இவ்விதம் தொழில் செய்து கொண்டிருக்கும் போதே, கண்மூடி தியானத்தில் ஆழ்ந்து விடுவான். அச்சமயயங்களில்தான் என்ன செய்கிறோம் என்பதை அறியா நிலையிலேயே, பிசைந்து கொண்டிருக்கும் களி மண்ணையே மலர்களாக பாவித்து பெருமாளுக்கு அர்ச்சிப்பான். காலப்போக்கில் இதுவே அவனது அன்றாட அலுவலாகவும் ஆகி விட்டது. இது இப்படியிருக்க, குழப்பத்திலிருந்த தொண்டைமான் ஒருநாள் அபூர்வக் கனவொன்றைக் கண்டான்.

அக்கனவில் வெங்கடநாதன் தோன்றி, `தமது பக்தன் பீமய்யன் செய்யும் பூஜையே தமக்கு மிகுந்த மனநிறைவை அளிப்பதாகவும், அந்தப் பூஜையை நீயும் செய்து பார், அப்போது உண்மை விளங்கும்' என்று கூறி மறைந்தார். தொண்டைமானும் திருமால் குறிப்பிட்ட இடத்துக்கு சென்று பீமய்யன் செய்யப்போகும் பூஜையை மறைந்திருந்து கவனித்தான்.

தினமும் செய்வது போலவே, பீமய்யன் தான் வடிவமைத்திருந்த வேங்கடவனின் சிலை அருகே அமர்ந்து மண்பாண்டங்களை செய்து கொண்டே, கண்மூடி மண் மலர்களைத் தூவி இறைவனை வழிபடுவதை கண்டான் தொண்டைமன்னன். உடனே பீமய்யனைச் சென்று கட்டித் தழுவிய தொண்டைமான் அவனிடம், `உன் பக்தி உயர்வான பக்தி.

உனது வழிபாட்டைத் திருமால் ஏற்றுக் கொண்டு விட்டார் என்பதை நான் புரிந்து கொண்டேன்' என்றான். இதற்கிடையில் அந்தப் பரந்தாமன் பீமய்யனின் கனவிலும் தோன்றி, `உன் பக்தியின் பெருமையை என்று பிறர்கூற அறிகின்றாயோ அன்றே உனக்கு முக்தி அளித்து, வைகுந்தத்துக்கு அழைத்துக் கொள்வேன்' எனக் கூறியிருந்தார்.

அதன்படியே தொண்டைமான், பீமய்யனின் பக்தியை பாராட்டியதைக் கேட்ட மறுகணமே அவனுக்கு முக்தி கிடைத்தது. எனவே புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து, ஏழுமலையானை மனம் உருக வழிபட்டால், செல்வமும், நிம்மதியும் கிடைக்கும் என்பதோடு, முக்தியும் வாய்க்கும் என்பது ஐதீகம். புரட்டாசி மாத சனிக்கிழமை விரதத்துக்கு இப்படியொரு மகத்துவம் இருக்கிறது.

துளசியின் பெருமை:

துளசியை வணங்குவதால் நற்குலம், ஒழுக்கம், மக்கட்பேறு, செல்வம், கல்வி, நோயற்ற வாழ்வு, வியாபாரம் முதலியன பெருகும். துளசி 400 விதமான நோய்களைப் போக்கும் சல்லிய கரணி என்னும் உயிர் ஊட்ட சக்தியை நல்குவது என ஆயுர்வேத நூற்கள் கூறுகின்றன. துளசிச்செடியினை வளர்த்து, நீர் பாய்ச்சி, ஆண்களும் பெண்களும் வழிபட வேண்டும்.

துளசிச் செடியின் வேர் மண்ணை நெற்றியில் இட்டுக்கொள்ள வேண்டும்.
திருமணமாகாத பெண்கள் தான் விரும்பிய மணாளனை அடையவும், சுமங்கலிப் பெண்கள் மாங்கல்யம் நிலை பெறவும் துளசியை வழிபட வேண்டும். வாஸ்து தோஷம் நீங்க துளசி மாடத்தில் துளசியை வைத்து வழிபடலாம்.

எப்படி வழிபட வேண்டும்?

புரட்டாசி மாதத்தில் வரும் ஒவ்வொரு சனிக்கிழமையையும் புனித நாளாகக் கருதப்படுகிறது. திருப்பதி வெங்கடாசலபதிப் பெருமாளுக்கு உரிய தினமாகவும் புரட்டாசி சனிக்கிழமைகள் கருதப்படுகின்றன. புரட்டாசி மாத சனிக்கிழமையில் விரதம் இருந்து வழிபடும் பக்தர்களுக்கு பல நலன்களையும் வளங்களையும் வாரி வழங்குகிறார் திருப்பதி ஏழுமலையான்.

காலையில் எழுந்து காலைக் கடன்களை முடித்து விட்டு நீராடி நெற்றியில் மதச் சின்னத்தை அணிய வேண்டும். சுத்தமாக ஆடை அணிந்திருத்தல் அவசியம். பூஜை அறையில் வெங்கடாஜலபதியின் உருவப்படம் அல்லது உருவச் சிலையை வைத்து முன்னே அமர வேண்டும். விளக்கை ஏற்றி, படத்திலும், விளக்கிலும் அலமேலு மங்கையுடன் கூடிய வெங்கடாஜலபதியை வணங்க வேண்டும்.

துளசியால் அர்ச்சனை செய்வது அவசியம். பின் தூபதீபம் காட்ட வேண்டும். பால், பழம், பாயாசம், கற்கண்டு, பொங்கல் ஆகியவற்றை நிவேதனப் பொருட்களாக படைக்க வேண்டும். வெங்கடாஜலபதியின் மகிமை பற்றிய நூல்களைப் படித்து "ஓம் நமோ நாராயணா'' என்ற மந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும். இதேபோல் மாலையிலும் வழிபாடு செய்ய வேண்டும்.

அன்று மாவிளக்கு ஏற்றி வெங்கடேசப் பெருமாளை வழிபட வேண்டும். மாவினாலேயே விளக்கு போல செய்து அதில் நெய்விட்டு தீபம் ஏற்றி வெங்கடேசப் பெருமானை வழிபடுவது காலம், காலமாக நடந்து வருகிறது. பூஜைக்குரிய பொருட்களை முன்னதாக தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

வெங்கடேசப் பெருமானின் படம் ஒன்றை வைத்து மாலை சூட்டி வெங்கடேச அஷ்டகம் சொல்லி பூஜை செய்ய வேண்டும். மாவிளக்கு ஏற்றி வைத்த பிறகு அந்த விளக்கு தணியும் போது கற்பூரம் ஏற்றி ஆரத்தி எடுக்க வேண்டும். மாவிளக்கு ஏற்றி பூஜை செய்யும்போது சர்க்கரைப் பொங்கல், வடை படைக்க வேண்டும். புரட்டாசி சனிக்கிழமைகளில் ஏதேனும் ஒரு நாளில் சிலர் திருப்பதிக்குச் சென்று தமது காணிக்கையைச் செலுத்தி வர வேண்டும்.
gandhimathi
gandhimathi

Posts : 900
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum