டெலிபோனில் பேசினார்: ரஜினி 1 1/2 மாதத்தில் சென்னை திரும்புவார்; இயக்குனர் ஷங்கர் தகவல்
Page 1 of 1

ரஜினிகாந்த் சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி அங்கேயே ஒரு அபார்ட்மென்ட் வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். அவர் எப்போது சென்னை திரும்புவார் என பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் 29-ந் தேதி ரஜினிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சென்னை ஆஸ்பத்திரிகளில் ஒரு மாதம் சிகிச்சை பெற்றார். பின்னர் சிங்கப்பூர் சென்று அங்குள்ள மவுண்ட் எலிசபெத் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். தீவிர சிகிச்சைக்கு பின் தற்போது பூரண குணமடைந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
சென்னையில் முக்கியஸ்தர்கள் உடல்நலம் பற்றி விசாரிக்க குவிவார்கள் என்பதாலும், இதனால் கிருமி தொற்று ஏற்படலாம் என்பதாலும் இங்கு வருவதை தள்ளி வைத்துள்ளார். ஆனாலும் “ராணா” பட வேலைகள் மும்முரமாக நடக்கின்றன.
ரஜினி வந்ததும் படப்பிடிப்பை துவக்குகின்றனர். இதற்கிடையில் சிங்கப்பூரில் இருந்து தலைவர்கள் மற்றும் நண்பர்களுடன் ரஜினி டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசி வருகிறார். முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆகியோருடன் டெலிபோனில் பேசி உடல் நிலை குறித்து விளக்கினார்.
இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடமும் பேசினார். டைரக்டர் ஷங்கருடனும் தற்போது டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். இது குறித்து ஷங்கர் கூறியதாவது:-
என் செல்போனுக்கு சிங்கப்பூரில் இருந்து அழைப்பு வந்தது. உறவினர்கள், நண்பர்கள் யாரேனும் கூப்பிடுகிறார்களோ என நினைத்தேன். ஒருவேளை ரஜினியாக இருக்குமோ என்றும் சந்தேகித்தேன். அதை எடுத்து நான் பேசிய போது ரஜினியே லைனில் வந்தார். குணமாகி விட்டதாக கூறினார். “நண்பன்” படம் சூட்டிங் எப்படி போகிறது என்று விசாரித்தார். இன்னும் 45 நாட்களில் சென்னை திரும்பி விடுவேன் என்றும் தெரிவித்தார்.
இவ்வாறு ஷங்கர் கூறி உள்ளார்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விரைவில் தாய் குழந்தையுடன் வீடு திரும்புவார் – குடும்பத்தார் தகவல் (குழந்தையின் படம் இணைப்பு)
» மகள்களால் அப்செட்; சென்னை திரும்பினார் ரஜினி!
» எந்திரனில் ‘எலெக்ட்ரானிக் கொசு’ – ஷங்கர் சொன்ன சுவாரஸ்ய தகவல்
» ஹீரோவை சிபாரிசு செய்த ஹீரோயின் : இயக்குனர் தகவல்
» ஒன்பதுல குரு இரண்டாம் பாகம்: இயக்குனர் தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum