ஒருதலைக் காதலால் ஏற்படும் பிரச்சனைகள்
Page 1 of 1
ஒருதலைக் காதலால் ஏற்படும் பிரச்சனைகள்
ஒருதலைக்காதல் என்பது, ஒரு வகையான வற்புறுத்தல். தான் விரும்பும் ஒருத்தர் தன்னை விரும்ப வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படும் முறை. ஒருவர், இன்னொருவரை காதலிக்க பல காரணங்கள் இருக்கலாம். அதுபோல் ஒருவர், இன்னொருவரை காதலிக்காமல் போகவும் பல காரணங்கள் இருக்கலாம்.
ஒருதலைக் காதலர்களுக்கு இந்த உண்மை புரியாமல் போவதால், ஒருதலை காதல் ஒரு வன்முறை யாகவே இருந்து கொண்டிருக்கிறது. பல நேரங்களில் இந்த ஒருதலைக்காதலில் ஏற்படும் முடிவுகள் விபரீதமானதாக இருக்கின்றன. காதல் தோல்வியில் ஏற்படும் வலியும் வேதனையும் இந்த ஒருதலை காதல் தோல்வியிலும் ஏற்படும்.
அந்த ஒருதலைக் காதலர் ஆணாகவும் இருக்கலாம். பெண்ணாகவும் இருக்கலாம். இருபக்கத்திலும் பாதிப்புகள் ஏற்படும் என்பதால், இந்த மாதிரியான காதலர்களை பக்குவமாக கையாள வேண்டும். ஒருதலைக்காதல் அன்பு நிறைந்ததல்ல! வம்பு நிறைந்தது! அதனால் இந்த ஒருதலைக் காதலை கைவிடுவது நல்லது.
அப்படி முடியாத பட்சத்தில் அடுத்தவருக்கு எந்த பாதிப்பும் இல்லாத வகையில் அமைதியாக இருப்பது காதலுக்கு தரும் மரியாதையாக இருக்கும். புகழ் பெற்ற ஒரு ஆங்கில நாவல், ஒருதலை காதலின் தியாகத்தை விளக்கும் வகையில் அமைந்துள்ளது. கதாநாயகனின் காதலை ஏற்றுக் கொள்ளாத நாயகி, தனக்கு பிடித்த ஒருவரை திருமணம் செய்து கொள்வாள்.
அப்போது கதாநாயகன் `என் உண்மை காதலை உணர்ந்து என்றாவது ஒரு நாள் நீ கண்ணீர்விடுவாய். அப்போது தான் என் தூய்மையான காதல் உனக்குப் புரியும்” என்று கூறுவான். கடைசியில் நாயகியின் கணவனை தூக்கிலிருந்து காப்பாற்றிவிட்டு அவனுக்கு பதில் அவன் தூக்கு மேடையேறிவிடுவான்.
இறுதியில் அந்த ஒருதலைக்காதலனின் கல்லறையில் நாயகி கண்ணீர் விடுவாள். `உன் ஒருதலை காதலுக்கு நான் தரும் அஞ்சலி இந்த கண்ணீர் துளிகள்’ என்று கூறுவதாக கதை முடியும். இப்படி ஒருதலைக்காதலை தியாகத்தில் முடிக்கும் பக்குவம் எத்தனை பேருக்கு இருக்கும்? காதல் என்றாலே அது திருமணத்தில் முடிய வேண்டும் என்ற கட்டாயமில்லை.
காதல் ஒரு தெய்வீக உணர்வு. மனிதனின் இதயத்தை மென்மையாக்கும் அற்புத உணர்வு அது. ஆனால் ஒருதலைக்காதல் மேற்கூறியவைகளுக்கு நேர் எதிராக மாறுகின்றன. தெய்வீகத்திற்கு பதில் வெறியையும், மென்மைக்கு பதில் முரட்டுதனத்தை அது உருவாக்கும்.
தான் காதலிக்கும் நபர் தன்னை திரும்பிப் பார்க்கவில்லையே என்ற ஆதங்கம், ஏமாற்றம், வேதனை, ஒரு பொறுமையற்ற நிலையை மனதில் ஏற்படுத்தி அவர்களை ஒரு “சைக்கோ”வாக மாற்றிவிடும் கொடுமையும் இன்றைய காலகட்டத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
தான் காதலித்த பெண்ணுக்கு நடந்து விட்ட திருமணத்தை சகித்துக் கொள்ள முடியாமல் அவள் தனியாக இருக்கும் நேரத்தில் வம்பு செய்யும் சோகமும் நிகழத்தான் செய்கிறது. இது சமூகத்தை பெருமளவில் பாதிக்கிறது. ஒருதலைக்காதல் என்ற வட்டத்தில் சிக்கிக் கொள்ளும் இளைஞர்கள் இந்த பெரிய உலகத்தை மறந்து விடுகிறார்கள்.
தான் செய்யத் துணியும் காரியத்தின் எதிர்விளைவுகளைப் பற்றிய சிந்தனையும் அவர்களுக்கு இருப்பதில்லை. எப்படியாவது போராடி காதலில் வென்றுவிட வேண்டும் அல்லது கொன்றுவிட வேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள்.
வேதனையின் விளிம்பிற்கு சென்று தற்கொலை செய்துக் கொள்வேன் என்று மிரட்டவும் செய்கிறார்கள். தற்கொலை செய்து கொள்கிறவர்கள் இந்த மனிதப்பிறவியின் மகத்துவம் புரியாதவர்கள். இன்றைய இளைஞர்கள் ஒருதலைக்காதலின் சோகத்தை புரிந்து கொண்டு அதிலிருந்து விடுபட வேண்டும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பெண்களுக்கு அலுவலகத்தில் ஏற்படும் பிரச்சனைகள்
» உட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்வதால் ஏற்படும் பிரச்சனைகள்
» ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்வதால் ஏற்படும் பிரச்சனைகள்
» பாய் ஃபிரண்ட் பிரச்சனைகள்
» பெண்களின் பிரச்சனைகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum