பாய் ஃபிரண்ட் பிரச்சனைகள்
Page 1 of 1
பாய் ஃபிரண்ட் பிரச்சனைகள்
இளம் வயதுப் பெண்கள் தங்களின் சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள பெற்றோர் அல்லாத ஒரு உறவை தேடுகின்றனர். சிறந்த நட்பு கிடைக்கும் பட்சத்தில் அவர்களுக்கு மனச்சிக்கல்கள் எழ வாய்ப்பில்லை. ஆனால் பாய் ஃப்ரெண்ட் என்று இன்றைய யுவதிகள் ஏற்படுத்திக்கொள்ளும் உறவு அவர்களுக்கே சிக்கலை ஏற்படுத்துகிறது.
ஏனெனில் எல்லா ஆண் நண்பர்களும் நமக்கு நன்மையை ஏற்படுத்துவார்கள் என்று கூறமுடியாது. ஒரு சில பொறாமை பிடித்த நபர்களும் நண்பர்களாய் கிடைக்க வாய்ப்புள்ளது. பிரச்சினைக்குரியவர்கள் ஆண் நண்பர்களாய் அமையும் பட்சத்தில் அதை எப்படி சமாளிப்பது என்றும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பாய் ஃபிரண்ட் என்பவர் அழகாகத்தான் இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. அவனிடமுள்ள நல்ல குணங்களைப் பாருங்கள். அதன் பிறகு ஒரு முடிவெடுங்கள். அவசரப்பட்டோ அல்லது கண்மூடித் தனமாகவோ எந்த முடிவும் எடுக்காதீர்கள். அது ஆபத்தில் முடியும். அவனைச் சந்தியுங்கள், பேசுங்கள் ஆனால் எந்த சந்தர்ப்பத்திலும் தனியாக சந்திக்க வேண்டாம்.
சற்று அவகாசம் எடுத்து நீங்கள் அவனை பாய் ஃபிரண்டாக ஏற்றுக்கொள்ளலாமா என்று சிந்தித்துப் பாருங்கள். உங்கள் நண்பர் உங்களின் கல்விக்கோ, லட்சியத்திற்கோ இடைஞ்சல் விளைவிப்பவனாக இருக்கக் கூடாது. உங்களின் கல்லூரி பரிட்சைக்கு முதல் நாள் உங்களை சினிமா பார்க்க அவன் அழைத்தால் அந்த மாதிரியான நண்பனை மறந்துவிடுங்கள்.
தனது நேரத்தை உல்லாசமாக கழிக்கவே அவன் உங்களுடன் பழகுகிறான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அவன் உங்களைப் பற்றியோ அல்லது உங்கள் எதிர்காலத்தைப் பற்றியோ கவலைப்படாதவன் என்பதை உணருங்கள். உங்களின் எதிர்காலத்தை நல்லபடியாக உருவாக்க, நன்கு படிக்க வேண்டியது அவசியம்.
ஒரு நல்ல பாய் ஃபிரண்ட் உங்களின் லட்சியங்களை அடைவதில் உங்களுக்கு உதவியாக இருக்க வேண்டும். லட்சியத்திற்கு இடைஞ்சலாக உள்ளவர்கள் கட் செய்து விடுங்கள். பொறாமை என்பது ஒரு சில நட்பில் ஏற்படுவதுதான். உங்கள் நண்பன் எதனால் பொறாமைப்படுகிறான் என்பதை கண்டறியுங்கள்.
நீங்கள் உங்கள் சகோதரர்கள், உறவினர்களுடன் பாசமாக பழகுவதைக் கண்டு அவர் பொறாமையால் பொசுங்க கூடும். அத்தகைய ஆண் நண்பனின் நட்பு அவசியமெனில் உங்களின் நிலை குறித்து விளக்கமளியுங்கள். அதுதான் ஆரோக்கியமான நட்பினை உருவாக்கும். இல்லையெனில் அது உங்களுக்கே வினையாகிவிடும் ஜாக்கிரதை.
நன்கு நேரம் எடுத்துக்கொண்டு சிந்தித்து எடுத்த முடிவு எப்பொழுதும் நல்லதாக அமையும். அவசரபட்டு எடுத்த முடிவுகள் உங்களை துன்பத்துக்கு ஆளாக்கும். சரியான மற்றும் நல்ல பாய் ஃபிரண்டை தேர்ந்தெடுப்பது என்பது உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் மிக முக்கியமான முடிவு ஆகும்.
ஆகவே உங்களுக்குத் தேவையான நேரத்தை நன்றாக எடுத்துக்கொண்டு நல்ல பாய் ஃபிரண்டை தேர்ந்தெடுங்கள். கெட்ட பழக்கவழக்கங்களை உடையவனை கட்டாயமாக நீங்கள் தவிர்க்க வேண்டும். அதுதான் உங்களின் வாழ்க்கைக்கு நல்லது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» உனக்கு ஒரு பாய் ஃபிரண்ட் வேணுமா(டி)?
» உனக்கு ஒரு பாய் ஃபிரண்ட் வேணுமா(டி)?
» பாய் ஃபிரண்ட் அவசியம் வேணுமா?
» பாய் ஃபிரண்ட் அவசியம் வேணுமா? அலசல் ரிப்போர்ட்
» சாரி , பெஸ்ட் ஃபிரண்ட்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum