பெண் பிள்ளைகளை பாதுகாக்க சில வழிகள்
Page 1 of 1
பெண் பிள்ளைகளை பாதுகாக்க சில வழிகள்
• தனியாக செல்லும் மாணவிகளை கல்லூரிகளுக்கு முடிந்தவரை நாமே அழைத்துச் சென்று கல்லூரிகளில் விடுவது, திரும்ப அழைத்து வருவது மிகவும் நல்லது. பெற்றோர்கள் முக்கியமாக கல்லூரிகள், மற்றும் பள்ளிகளில் படிக்கும் தங்கள் பெண் குழந்தைகளின் வருகைப்பதிவு (அட்டன்டன்ஸ்) சரியாக உள்ளதா என வாரம் ஒருமுறை சரிபார்க்க வேண்டும்.
• கூட படிக்கும் எந்த சக மாணவனிடமும் உங்கள் தொலை பேசி எண்களை கொடுக்காதீர்கள். அதுபோல் சக மாணவியரால் நல்லவன் என அறிமுகப்படுத்தப்படும் யாரையும் நீங்கள் ஆண் நண்பர்களாக ஆக்கி கொள்ளாதீர்கள். பெரும்பாலும் இவர்கள் தங்கள் வலையில் வீழ்ந்த மற்ற பெண்கள் மூலமாகவே அடுத்த பெண்ணிற்கு தூண்டிலை வீசுகின்றார்கள் என்பதை நீங்கள் கவணத்தில் கொள்ள வேண்டும்.
• தோழிகள் துணைக்கு வந்தாலும் கூட உங்கள் தோழிகளின் ஆண் நண்பர்களுடன் நீங்கள் வெளியே செல்வதோ, உணவருந்த செல்வதோ அவர்களுடன் பேசுவதோ வேண்டாம். உங்கள் தோழிகளின் ஆண் நண்பர்களுக்கும் உங்கள் தொலைபேசி எண்களை கொடுக்க வேண்டாம். ஏனென்றால் இங்கிருந்துதான் தொடர்புகள் ஆரம்பமாகின்றன. பிரச்சனைகளும் ஆரம்பமாகிறது.
• உங்கள் தோழியர் எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் கூட அவர்களின் செல்போன் மூலம் உங்களை படம் எடுப்பதை அனுமதிக்க வேண்டாம். முக்கியமாக நீங்கள் தனிமையில் இருக்கும் போதும் ஆடைகள் கவனமின்றி இருக்கும் போதும் கவனமாக இருக்கவும். . அப்படி படமெடுப்பது தெறிந்தால் உடனடியாக அதை வாங்கி அழித்த விடுங்கள்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பெண் பிள்ளைகளை பாதுகாக்க சில வழிகள்
» பெண் பிள்ளைகளை பாதுகாக்க சில வழிகள்
» நகங்களைப் பாதுகாக்க சில வழிகள் .
» இளமையைப் பாதுகாக்க எளிய வழிகள்
» பெண், ஆணின் தாக்குதலில் இருந்து தப்பிக்க சில வழிகள்
» பெண் பிள்ளைகளை பாதுகாக்க சில வழிகள்
» நகங்களைப் பாதுகாக்க சில வழிகள் .
» இளமையைப் பாதுகாக்க எளிய வழிகள்
» பெண், ஆணின் தாக்குதலில் இருந்து தப்பிக்க சில வழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum