தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காதல் தோல்வி! இளம் ஹீரோ தற்கொலை!!

Go down

காதல் தோல்வி! இளம் ஹீரோ தற்கொலை!! Empty காதல் தோல்வி! இளம் ஹீரோ தற்கொலை!!

Post  ishwarya Wed Apr 17, 2013 1:45 pm

காதல் தோல்வி காரணமாக இளம் நடிகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் பெயர் அஜய். தமிழில், முழுக்க முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியிருக்கும் அம்புலி படத்தின் ஹீரோதான் இந்த அஜய்.

ஓர் இரவு படத்தை இயக்கிய இரட்டை இயக்குனர்களின் இயக்கத்தில் உருவாகியுள்ள அம்புலியில், அஜய்க்கு ஜோடியாக சனம் என்ற புதுமுக நடிகை நடித்துள்ளார்.

சூட்டிங்கின்போது நாயகன் – நாயகி இடையே ஏற்பட்ட நெருக்கம் காதலாகி, கசிந்துருகி தற்கொலையில் முடிந்திருக்கிறது. சூட்டிங் நேரத்தில் இருவரும் ஒரே அறையில் தங்கி, கணவன் – மனைவி போல வாழ்ந்திருக்கிறார்கள். சினிமா காதல் சிக்கலில் முடியும் என்று படக்குழுவை சேர்ந்தவர்கள் சொன்னதையெல்லாம் பொருட்படுத்தாமல் காதல் போதையில் மிதந்த ஹீரோ அஜய், இப்போது தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அஜய்யின் தற்கொலைக்கு காரணமாக காதல் இருக்கும் என்று போலீசார் கருதுகிறார்கள். அதேநேரம் வேறு ஏதாவது காரணம் இருக்குமா? என்கிற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum