உடும்பன் – திரை விமர்சனம்
Page 1 of 1
உடும்பன் – திரை விமர்சனம்
ஏழை பணக்காரன் வேறுபாடு இல்லாமல் தரமான கல்வி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பதை மையப்படுத்தியுள்ள கதை.
உடும்பன் என்பவன் உடும்பை போட்டு கொள்ளையடிக்கும் திருடன். இவர் அண்ணன்
கூலிப்படைத் தலைவன். தந்தையும் திருட்டுத்தொழில் செய்பவர். ஒரு நாள் ஐ.ஜி.
வீட்டிற்கே திருட செல்கிறான். அங்கு நகை, பணம் ஏதும் இல்லை. கத்தியை வைத்து
ஐ.ஜி.யை மிரட்ட, அவர் உடும்பனிடம் நேற்று குழந்தைகளை பள்ளிக்கூடத்தில்
சேர்க்கப்போனோம். ஸ்கூல் பீஸ் டொனேசன்னு இருந்த நகை பணம் எல்லாத்தையும்
புடுங்கிகிட்டாங்க .
நீங்க முகமூடி போட்டு திருட வந்திருக்கீங்க. அவங்க முகமூடி போடல இதான்
வித்தியாசம் என்று ஐ.ஜி. சொன்ன செய்தியை கேட்ட உடும்பன், காவல் துறையில்
பெரிய பொறுப்பில் உள்ள ஒரு அதிகாரியே இவ்வாறு சொல்லும்பொழுது பள்ளிக்கூடம்
நடத்துவது நாகரீக பகல் கொள்ளையாக தெரிகிறது என்று உடும்பன் பள்ளிக்கூடம்
துவங்குகிறான்.
பள்ளிக்கூடத்தை வைத்து கொள்ளையடித்தானா? அல்லது ஏழைகளுக்கு தரமான கல்வி கிடைக்கும்படி செய்தானா? என்பது மீதிக்கதை.
உடும்பன் கதாபாத்திரத்தில் வரும் ரோஜர் சிறப்பாக நடித்துள்ளார்.
சண்டைக்காட்சிகளில் பளிச்சிடுகிறார். கதாநாயகியான சனா தனியார் கல்வி பற்றி
பிஎச்.டி. ஆராய்ச்சி செய்கிறார். உடும்பன் பள்ளியில் நேரில் ஆய்வு செய்ய
முடிவு செய்து பள்ளியில் வேலைக்கு சேர்கிறார். ஒரு கட்டத்தில் உடும்பன்
மீது காதல் வயப்பட்டு திருமணம் செய்ய முடிவு செய்கிறார்.
இரண்டாவது கதாநாயகி கீர்த்திகா சில நிமிடங்கள் வந்து போனாலும் மனதில்
நிற்கிறார். வில்லன் கதாபாத்திரத்தில் சுனில் அறிமுகமாகிறார். படத்தில்
உடும்பனுக்கு அண்ணனாக வந்து மிரட்டுகிறார். படத்தில் இவர் வரும் காட்சிகள்
முதலில் சிரிப்பலையை ஏற்படுத்துகிறது. இறுதியில் வில்லன் தன்மையை இறுக்கமாக
வெளிப்படுத்துகிறார்.
இன்ஸ்பெக்டராக வரும் செல்லக்குறி, உடும்பன் அம்மா கம்பம் மீனா ஆகியோர்
நடிப்பில் கச்சிதம். படத்தை இயக்கி இசை, எழுத்து ஆகியவற்றை பாலன்
செய்துள்ளார். தனியார் கல்வி ஒரு வியாபாரம். அது சில கொள்ளையர்களிடம்
சிக்கி ஏழைகளின் இரத்தத்தை உரியும் அட்டை பூச்சியாக உள்ளது என்பதை மிகவும்
துணிச்சலோடு திரையில் சொல்லியிருக்கிறார்.
குறிப்பாக கொள்யைடிப்பதற்கு பள்ளிக்கூடம் கட்டலாம் என்று உடும்பன்
நண்பன் சொல்வதிலிருந்து அனைத்து வார்த்தைகளையும் இயக்குனர் நகைச்சுவை
வாயிலாகவே சொல்லியிருக்கிறார். குறிப்பாக மாணவர்கள் ஆயுதம் ஏந்தி
சண்டையிடுவது, விவசாயிகள் விவசாயம் இல்லாத காரணத்தினால் அடியாட்களாக
மாறுவது, தன் குழந்தையை பள்ளியில் சேர்க்க முடியாத நிலையில் நாக்கை
புடுங்கி சாவது போன்ற காட்சிகள் இயக்குனரின் பார்வையில் சிறப்பு.
பாவேந்தர் பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியோரின் பாடல்கள்
படத்திற்கு பலம் சேர்க்கிறது. கதையில் அழுத்தம் இருந்தும் திரையில்
பார்ப்பவர்களுக்கு காட்சிகள் பதிவாகாமல் போவது இழப்பு.
உடும்பன் ரசிகர்களின் மனதை கெட்டியாக பிடிக்கவில்லை.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கோ – திரை விமர்சனம்
» ரா-1 – திரை விமர்சனம்
» டூ – திரை விமர்சனம்
» கலகலப்பு – திரை விமர்சனம்
» விண்மீன்கள் – திரை விமர்சனம்
» ரா-1 – திரை விமர்சனம்
» டூ – திரை விமர்சனம்
» கலகலப்பு – திரை விமர்சனம்
» விண்மீன்கள் – திரை விமர்சனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum