முதல் இடம் – திரை விமர்சனம்
Page 1 of 1
முதல் இடம் – திரை விமர்சனம்
எமன்குஞ்சு என்கிற மகேஷ், ஏரியாவில சின்ன ரவுடி. காவல் நிலையத்தில் இருக்கும் ரவுடிகள் லிஸ்டில் இவரது பெயர் நான்காவது இடத்தில் இருக்கிறது. அந்த லிஸ்டில் முதலிடத்திற்கு வரணும்னு ஆசைப்படுகிறான் எமன்குஞ்சு. அதற்கிடையில் பள்ளி மாணவி ஒருத்தியுடன் காதல் வேறு வந்து தொலைக்கிறது.
அவளோ ரவுடியிசத்தை தூக்கிப் போட்டு விட்டு வரச் சொல்கிறாள். அதே நேரத்தில் அவன் எதிரி ரவுடிகள் அவனை கொல்வதற்கு திட்டம் போடுகின்றனர். தன் உயிரைக் காப்பாற்றுவதா? இல்லை தான் காதலித்த பெண்ணுடன் வாழ்வதா? என்னும் போராட்டத்தில் எமன்குஞ்சி எல்லாவற்றையும் தூக்கிப் போட்டுவிட்டு அவளோடு சேர்ந்தானா இல்லையா என்பது கதை.
படத்தின் டைட்டில் ‘முதல் இடம்’ என்று வந்ததும் அடடா, தெரியாம ஏவிஎம்மின் டிவி சீரியல் எதையோ போட போறாங்க போலிருக்கே என்று எண்ணத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு டைட்டிலில் ஒரு எளிமை கிராபிக்ஸ் உலகம் எங்கயோ போயிருச்சு. ‘சிவாஜி’ படம் எடுத்த ஏ.வி.எம்.முக்கு இது கூடவா தெரியாம போச்சு. டைட்டில் தான் அப்படி என்றால், அதைத் தொடர்ந்து வரும் காட்சிகள் டி.வி. சீரியல்தான் படம் என்பதை சத்தியம் செய்யாத குறையாக நிரூபிக்கின்றன.
ஹீரோ ஒருத்தன் கையை வெட்டிடுறாரு. அதற்கு நீதிபதி காரணம் கேட்டபோது ஹீரோ சொல்கிற காரணம் இருக்கே, ‘எச்சி’த் தனமான காரணம். மாப்ள ஜெயில்ல இருந்து வந்ததும் ஒரு பாட்டு ஒண்ணைப் போட்டுத் தாக்குறாங்க. அப்போதான் முதல் இடம் பதினஞ்சு வருஷத்துக்கு முன்னால இயக்குநர் மனசில உதிச்ச கதையாக இருக்குமோங்கிற சந்தேகம் நமக்கு வருது.
ஆடை இல்லாம டீ சொல்கிற காட்சி இருக்கே… அந்த காமெடி காட்சி மட்டும் தான் கொஞ்சம் சிரிக்க வைக்கிறது.
யாரு இந்த ஹீரோயின்? நடிகை சச்சுவோட பேத்தியா என்ன… அச்சு அசல் அவங்களே மாதிரி இருக்கிறாங்க. நல்லா நடிக்கிறாங்க. ஹீரோயின் ப்ரென்டா வருகிற அந்த பொண்ணு செம ஸ்மார்ட்.
இடைவேளை வரை போஸ்டர் ஒட்டுற பசை டப்பாக்குள்ள மாட்டிக்கிட்ட மாதிரி தோணுது. இடைவேளைக்கு அப்புறமா வருகிற கிஷோர்தான் படத்தின் நிஜ ஹீரோ. பாலு கேரக்டர்ல பின்னியிருக்கிறார் கிஷோர். இவரது தம்பியாக வருகிறார் திருமுருகன். இன்னும் உங்ககிட்ட நிறைய எதிர்பார்க்கிறோம் பாஸ்.
எமன்குஞ்சிக்கு ஹீரோ தரும் விளக்கம்… அப்பப்பா… இயக்குநர் இதுக்கே ரூம் போட்டு யோசிச்சிருப்பாரு போலிருக்கு. ரவுடியை பள்ளி மாணவி விரும்புவது போல் காட்டியிருப்பது எல்லாம் பல படங்களில் பார்த்த சலிப்பூட்டும் காட்சிகள்தான்.
இரண்டு பாடல்கள் மட்டும் கொஞ்சம் கேட்கிற மாதிரி இருக்கிறது.
ஹீரோயின் அப்பாவாக நடித்திருக்கிறார் இளவரசு. இவர் மகளுக்கு இவரிடமே எல்லாரும் லவ்லெட்டர் கொடுக்க அதற்கு இவர் கொடுக்கிற விளக்கம் இருக்கே. அடடடடா… நல்ல குடும்டா இதுன்னு சொல்ல வைக்கிறது.
விதார்த்…. பெட்டர் லக் நெக்ஸ் டைம்
முதல் இடம் – கடைசி இடம்!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ரா-1 – திரை விமர்சனம்
» டூ – திரை விமர்சனம்
» கோ – திரை விமர்சனம்
» கொலவெறி ’3′ – திரை விமர்சனம்
» ஒஸ்தி – திரை விமர்சனம்
» டூ – திரை விமர்சனம்
» கோ – திரை விமர்சனம்
» கொலவெறி ’3′ – திரை விமர்சனம்
» ஒஸ்தி – திரை விமர்சனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum