அன்னா ஹசாரே போராட்டம்: அமிதாப்-ஷாருக்கான், பிபாசா பாசு ஆதரவு
Page 1 of 1

ஊழலுக்கு எதிராக பலமான லோக்பால் மசோதா கொண்டு வர வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்து வரும் அன்னா ஹசாரேவிற்கு இந்தி நடிகர், நடிகைகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா அதிகார வரம்புக்குள் பிரதமர் மற்றும் உயர் நீதிபதிகளையும் கொண்டு வர வேண்டும் என்று கோரி, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே டெல்லியில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
இவரது உண்ணாவிரதத்துக்கு நாடு முழுவதும் மக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆங்காங்கே உண்ணாவிரதப் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். அன்னா ஹசாரேவிற்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி கொண்டே வருகிறது.
அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு இந்தி நட்சத்திரங்களும் ஆதரவு தெரிவித்து இருக்கின்றனர். ஊழலுக்கு எதிராக கடுமையான கருத்துக்களையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
நடிகர் ஷாருக்கான் கூறுகையில், ஒரு நாட்டுக்கு மோசமான களங்கம் என்று ஒன்று இருக்குமானால், அது ஊழல்தான். நமது நாட்டில் ஊழல் பெரிய அளவில் வளர்ந்து விட்டது. எனவே, தான் ஊழலுக்கு எதிரான இயக்கங்களுக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம். இதில் பல்வேறு அம்சங்கள் அடங்கி இருக்கின்றன. அரசியல் சட்ட அம்சங்களும் இதில் சம்பந்தப்பட்டு இருக்கின்றன.
இப்போது, வீதிகளில், தெருக்களில் நடந்து வரும் போராட்டம், அரசியல் சட்டத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது உறுதி.இந்த போராட்டத்துக்கு தோல்வியோ மரணமோ கிடையாது என்றார்.
அமிதாப்பச்சன் வெளியிட்டுள்ள கருத்து வருமாறு:-
சமூகத்திலும், அரசு நிர்வாகத்திலும் ஊழல் நிலவுவதை யாரும் விரும்பமாட்டார்கள். நமக்கு அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை காக்க அமைதி வழியில் போராடுகிறோம். சட்டத்தின் ஆட்சி நிலை நிறுத்தப்பட வேண்டும். ஊழலுக்கு எதிராக அனைவரும் கைகோர்க்க வேண்டும். இப்போது ஏற்பட்டுள்ள எழுச்சி வரவேற்கத்தக்கது ஆகும்.
இவ்வாறு அமிதாப்பச்சன் கூறினார்.
ஊழலுக்கு எதிரான போராட்டம் மிகவும் கடினமானது, நீண்ட பயணத்தை கொண்டது. இப்போது நடைபெறும் போராட்டம் ஒரு தொடக்கம்தான். இப்போது நடந்து வரும் போராட்டம் மூலம் ஊழலுக்கு ஒரு விடுதலை கிடைக்கவில்லை எனில், இந்தியாவுக்கு மற்றொரு வாய்ப்பு கிடையவே கிடையாது என்று சேகர்கபூர் கூறினார்.
நடிகை பிபாசா பாசு கூறுகையில், அன்னாதான் இந்தியா, இந்தியாதான் அன்னா. ஊழலை கொல்லக்கூடிய நம்பர் 101. அமைதியையே நாம் அனைவரும் விரும்புகிறோம் என்றார்.
பிரீத்தி ஜிந்தா வெளியிட்டுள்ள கருத்தில், ஒவ்வொரு இந்தியனும் அன்னா ஹசாரேவிற்கு ஆதரவு தெரிவிக்கவேண்டும். நமது நாட்டில் நிலவும் ஊழலுக்கு எதிராக நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார்.
குணால் கோஹ்லி கூறுகையில், நமது நாட்டின் வரலாறு போற்றத்தக்கது. தியாகங்களை கொண்டது. இதுதான் நம்மை பெருமைப்படுத்துகிறது. அந்த தியாக வழியை நாம் அனைவரும் பின்பற்றி நடக்கவேண்டும். அன்றாட வாழ்க்கையில் ஊழலுக்கு இடமே இருக்கக் கூடாது என்றார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அன்னா ஹசாரே உண்ணாவிரத்தில் பங்கேற்கிறார் இளையதளபதி விஜய்!
» விஸ்வரூபம் பட விவகாரம்: கமல்ஹாசனுக்கு ஷாருக்கான், நாகார்ஜுன் உள்ளிட்ட நடிகர்கள் ஆதரவு
» இந்தியாவின் பெரிய ஹீரோ அன்னா ஹசாரே : சீயான் விக்ரம்
» தமிழர்கள் போராட்டம் எதிரொலி – கொழும்பு பயணத்தை ரத்து செய்வாரா அமிதாப்?
» ஊழலுக்கு எதிராக தமிழில் தயாரான “காந்தி” படத்தை அன்னா ஹசாரே பார்க்கிறார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum