தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சொந்த படம் தயாரிக்க சூர்யா ரெடி

Go down

சொந்த படம் தயாரிக்க சூர்யா ரெடி Empty சொந்த படம் தயாரிக்க சூர்யா ரெடி

Post  ishwarya Tue Apr 16, 2013 6:16 pm

முன்னணியில் இருக்கும் எல்லா நடிகர்களுக்குமே சொந்த படம் தயாரிக்கும் அளவிற்கு துட்டு குவிந்து கிடக்கிறது. எனினும் சொந்த காசில் ஏன் சூனியம் வைத்துக்கொள்ளவேண்டும்? என்பதில் தெளிவாக இருப்பதால் அந்த முயற்சியை பலரும் எடுப்பதில்லை. கால்ஷீட் கொடுத்தோமா, காசை வாங்கி போட்டோமா என்பதுதான் நடிகர்கள் பலரது பாலிசி.

இந்நிலையில் திடீரென தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார் சூர்யா. சில வாரங்களுக்கு முன் ஏ.ஆர். முருகதாஸ் தயாரிப்பில், ஜெய் – அஞ்சலி நடித்துள்ள ‘எங்கேயும் எப்போதும்’ பட விழாவில் கலந்துகொண்டு பேசிய சூர்யா, “முருகதாஸ் தயாரிப்பாளரானதை நினைத்து சந்தோஷப்படுகிறேன். தன்னுடைய உதவி இயக்குனரையே இயக்குனராக்கி அழகு பார்ப்பது அதைவிட சந்தோஷம்.

புதியவர்களுக்கு அவர் வாய்ப்பு கொடுத்துள்ளது பாராட்டுக்குரியது. இதை பார்க்கும்போது எனக்கும் தயாரிப்பாளராக வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது. புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் வருடத்திற்கு இரண்டு படங்களை தயாரிக்கவேண்டும் என்று நினைக்கிறேன். அடுத்த ஆண்டு முதலே இதனை செயல்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன்.” என்றார்.

அவர் மேடையில் பேசியதை செயலாக்க தயாராகிவிட்டாராம், திறைசாலியுள்ள அசிஸ்டெண்ட் டைரக்டர் யாராவது இருந்தால் வந்து கதை சொல்ல சொல்லுங்கள் என தனது நட்பு வட்டாரங்களில் சூர்யா சொல்லி வருகிறாராம். அநேகமாக ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் அவர் பட தயாரிப்பில் இறங்கிவிடுவார் என்று சொல்லப்படுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum