தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எனக்கு கோவில் கட்ட வேண்டாம் – ஹன்சிகா

Go down

எனக்கு கோவில் கட்ட வேண்டாம் – ஹன்சிகா Empty எனக்கு கோவில் கட்ட வேண்டாம் – ஹன்சிகா

Post  ishwarya Tue Apr 16, 2013 5:26 pm

“ஒரு கல் ஒரு கண்ணாடி” படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நடிக்கிறார் ஹன்சிகா. இதன் படப்பிடிப்பு மதுரையில் சமீபத்தில் நடந்தது. அப்போது ரசிகர்கள் சிலர் ஹன்சிகாவிற்கு கோவில் கட்டப் போவதாக தெரிவித்தனர்.

ஆனால் ஹன்சிகா மறுத்து விட்டார். இதையும் மீறி ஹன்சிகாவுக்கு ரசிகர்கள் கோவில் கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே குஷ்பு, நமீதாவுக்கு கோவில் கட்டப்பட்டு உள்ளது. அவர்கள் ரசிகர்களை கண்டிக்கவில்லை. கோவில் கட்டப்படுவது குறித்து ஹன்சிகா கூறியதாவது: எனக்கு கோவில் கட்டப் போவதாக ரசிகர்கள் என்னிடம் கூறியதும் ஆச்சரியமானேன். உயிரோடு இருப்பவர்களுக்கு கோவில் கட்டுவது இல்லை. நான் ரசிகர்களை மதிக்கிறேன். அவர்கள் என்மேல் அதிகமான அன்பும் மரியாதையும் வைத்துள்ளனர். இது என்னை மேலும் சாதிக்க ஊக்கப்படுத்துகிறது.

கடவுளோடு மனிதர்களை ஒப்பிட முடியாது. எனவே கோவில் கட்டுவதற்கான பணத்தை ஏழைகளுக்கு உதவிகள் செய்ய செலவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum