தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சூர்யாவுக்கு நான் வில்லனில்லை !

Go down

சூர்யாவுக்கு நான் வில்லனில்லை ! Empty சூர்யாவுக்கு நான் வில்லனில்லை !

Post  ishwarya Tue Apr 16, 2013 4:17 pm

‘அயன்’ படத்தை அடுத்து கே.வி.ஆனந்த், சூர்யா மீண்டும் இணையும் படம் ‘மாற்றான்’. இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் வில்லன் பாத்திரத்திற்காக பிரகாஷ்ராஜ ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். படப்பிடிப்பும் சென்னையில் நடைபெற்று வந்தது.

இப்படத்தில் பிரகாஷ்ராஜிற்கு தலையில் விக் வைத்து புது கெட்டப் கொடுக்கப்பட்டது. அதில் அவருக்கு திருப்தி இல்லையாம். ஷூட்டிங்கின் போது இதை இயக்குனர் கே.வி. ஆனந்திடம் சொல்ல, கே.வி. ஆனந்த் இந்த கதாபாத்திரத்திற்கு இப்படிப்பட்ட கெட்டப் தான் சரியாக வரும் என்று சொன்னாராம். பிரகாஷ்ராஜ் அதை ஒப்புக்கொள்ளவில்லை.

மேலும், பிரகாஷ்ராஜ் பல்வேறு மொழி படங்களில் நடித்து வருவதால், ‘மாற்றான்’ படத்திற்கு கேட்கப்பட்ட தேதிகளும் ஒத்து வராததால் ‘மாற்றான்’ படத்தில் வில்லனாக நடிக்க இயலாது என விலகி விட்டார்.

தற்போது அந்த வில்லன் பாத்திரத்திற்கு, ‘தெய்வத்திருமகள்’ படத்தில் அமலா பாலின் தந்தையாக நடித்த சச்சின் கெடேகர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum