தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகை மானுவுக்காக நாடகம் பார்த்த ரஜினி!

Go down

நடிகை மானுவுக்காக நாடகம் பார்த்த ரஜினி! Empty நடிகை மானுவுக்காக நாடகம் பார்த்த ரஜினி!

Post  ishwarya Wed Apr 10, 2013 5:28 pm


சரண் இயக்கத்தில் அஜித் நடித்த காதல் மன்னன் படத்தில் நாயகியாக நடித்தவர் மானு. இவர் சிங்கபூர் வாழ் தமிழ்ப்பெண். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, சிங்கப்பூர் மவுண்ட் எலிசபீத் மருத்துவமனையில் ரஜினி தங்கி சிறுநீரக சிகிச்சை பெற்றபோது, மருத்துவமனை நிர்வாகம், ரஜினி ஆகிய இரண்டு தரப்புக்கும் பாலமாக இருந்தவர் மானு. இதனால் மானுவுக்கு மிகவும் நன்றி கடன் பட்டிருப்பதாக லதா ரஜினி நெகிழ்வுடன் குறிப்பிட்டார்.

தற்போது வெளிநிகழ்சிகளில் கலந்து கொள்ள தொடங்கிவிட்ட ரஜினி, நன்றி மறக்காமல், மானு அழைப்பை எற்று 300 மாற்றுத்திறன் படைத்த குழந்தைகளுடன் பீஷ்மார் நாடகத்தை கண்டுகளித்தார். ரஜினியுடன் அருகில் இருந்து நாடகத்தை பார்த்தார் இயக்குனர் சரண். மானு ஆர்ட்ஸ் இந்தியா மேற்பார்வையில் அவன்ட் தியேட்டர்ஸ், சிங்கப்பூர் இணைந்து சென்னை அரசு அருங்காட்சியகம் சர்க்கிள் தியேட்டரில் இந்த நாடகம் நடந்தது. முதல் பாகம் தமிழிலும், இரண்டாம் பாகம் ஆங்கிலத்திலும் நடத்தப்பட்டது. இந்த நாடகத்தின் சிறப்பம்சம் பீஷ்மர் கதாபாத்திரம். பீஷ்மராக நடித்த திரு ரவாலன் நாராயணசுவாமி சிங்கபூர் நாட்டைச் சேர்ந்த தமிழர்.

இந்த நாடகத்தை தனது மானு ஆர்ட்ஸ் மேற்பார்வையில் சென்னையில் அக்டோபர் 29 மற்றும் 30 ஆகிய இரண்டு நாட்கள் வெற்றிகரமாக நடத்தினார். முதல்நாள் நடந்த காட்சிக்கு பாலச்சந்தர்,பாண்டியராஜன், நாசர், பார்த்திபன், இசையமைப்பாளர் பரத்வாஜ், பசுபதி, பாடலாசிரியர் மதன் கார்கி, ராஜேஷ் வந்து சிறப்பித்து இருகிறார்கள். இரண்டாவது நாள் நாடகத்துக்கு ரஜினி வந்தாராம்.

இதற்கிடையில் சங்கரா அறக்கட்டளை சார்பாக இயக்குனர் எஸ்.பி.முத்துராமனுக்கு வழங்கப்பட்ட விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட ரஜினி, தனது உடல்நலம் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டதை உற்சாகமான தனது பங்கேற்பின் மூலம் நிரூபித்தார்.

தற்போது மேலும் பல பொதுநிகழ்சிகளில் கலந்து கொண்டு வரும் ரஜினி, நேற்று பிரபல பட அதிபர் மெட்ரோ பிலிம்ஸ் ஜெயக்குமார் இல்லத்திருமணத்தில் தனது மகள் ஐஸ்வர்யா அஸ்வினுடன் கலந்து கொண்டு திரும்பியிருகிறார். ஜெயக்குமாரின் மகள் அர்ச்சனா-ஆனந்த் திருமணத்தில்,

அவருடன் ராணா இயக்குனர் ரவிகுமாரும் கலந்து கொண்டார். ரஜினி இப்போது கெட் செட் ரெடி!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum