தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சென்னையில் ரூ.3.75 கோடி வசூல் : தெய்வத்திருமகள் சாதனை!

Go down

சென்னையில் ரூ.3.75 கோடி வசூல் : தெய்வத்திருமகள் சாதனை! Empty சென்னையில் ரூ.3.75 கோடி வசூல் : தெய்வத்திருமகள் சாதனை!

Post  ishwarya Tue Apr 16, 2013 2:19 pm

சென்னையில் மட்டும் ரூ.3.75 கோடி வசூல் செய்து விக்ரமின் தெய்வத்திருமகள் படம் சாதனை படைத்துள்ளது. சமீபத்தில் வெளியாகி, பெண்கள் உள்ளிட்ட குடும்ப ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற படம் தெய்வத்திருமகள். விக்ரம், அனுஷ்கா, சந்தானம், அமலாபால் நடித்துள்ள இந்தப் படத்தை மோகன் நடராஜன் தயாரித்துள்ளார்.

தெய்வத்திருமகள் படம் ரிலீசுக்கு முன்பே பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தது. குறிப்பாக பெயர் விஷயத்தில் ஒரு சமூகத்தை சேர்ந்த அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதன் பிறகு பெயர் மாற்றத்துடன் படம் ரிலீஸ் ஆனது. இந்தப் படம் ஒரு ஆங்கிலப் படத்தின் உல்டா என்றாலும் கூட, தமிழில் அதை இயக்குனர் விஜய் கொடுத்திருந்த விதம் அனைவரையும் கவர்ந்தது. இதனால் படம் ஏ, பி, சி என அனைத்து சென்டர்களிலும் சிறப்பாக ஓடி 50 நாட்களை கடந்துள்ளது. சென்னை நகரில் மட்டும் ரூ 3.75 கோடி வசூலைப் பெற்றுள்ளது தெய்வத்திருமகள். விக்ரம் நடித்த படங்களிலேயே சென்னையில் அதிக வசூலைக் குவித்த படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum