வடிவேலுன்னா உயிர் எனக்கு – பிரபுதேவாவின் சப்போர்ட்
Page 1 of 1

பத்திரிகையாளர்களை கண்டாலே ‘ஒன் ஸ்டெப் பேக்’ என்று ஓடிவிடும் பிரபுதேவா அன்று விஷால் நடிக்கும் ‘வெடி’ பிரஸ் மீட்டுக்கு வந்திருந்தது ஆச்சர்யம். வந்தவர் உம்மென்று முகத்தை வைத்திராமல் தனக்கேயுரிய ஹாஸ்யத்துடன் உரையாடியது அதைவிட ஆச்சர்யம்.
தெலுங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சவுரியம் படத்தின் ரீமேக்தான் இந்த வெடி. விஷால்-சமீரா ரெட்டியும் இணையும் இப்படத்தில் காமெடிக்கு பிரபுதேவா தேர்ந்தெடுத்தது விவேக்கை. நீங்களும் வடிவேலுவும் நல்ல ஃபிரண்ட்ஸ்சா இருந்தீங்க. ஏன் வடிவேலுவை விட்டுட்டு விவேக்கை நடிக்க வைக்கணும்? இந்த கேள்விக்கு பதறினார் மாஸ்டர்.
இருந்தீங்க… இல்ல. இப்பவும் இருக்கோம். வடிவேலுன்னா உயிர் எனக்கு. இந்த கதைக்கு விவேக் இருந்தா பெட்டரா இருக்கும்னு தோணுச்சு. அதனால்தான் என்றார். விஷால் தொடங்கி விஜய் ஆன்ட்டனி வரைக்கும் பாராட்டி தள்ளிய பிரபுதேவா, இப்படி ஒரு டீம் எனக்கு கிடைச்சது சந்தோஷம் என்றார்.
பின்னாலேயே பேச வந்த விஷால், ஏன் இந்த ரீமேக் கதைக்கு பிரபுதேவா மாஸ்டரை அழைத்தோம் என்பதை தன்னிலை விளக்கமாக்க, நிருபர்களின் சந்தேகம் நிமிடத்தில் தீர்ந்தது.
தெலுங்கில் வெளிவந்த சவுரியம் படத்தை பார்த்ததும் அதை தமிழ்ல தயாரிக்கணும் என்று முடிவு செய்தோம். இருந்த மாதிரியே இருக்கட்டும் என்று நினைச்சிருந்தா டூப் நெகட்டிவ்னு சொல்வாங்க. அதுமாதிரி சில காட்சிகளை ரிமூவ் பண்ணிட்டு நான் வர்ற காட்சிகளை மட்டும் ஷ§ட் பண்ணி எடுத்திருக்கலாம். ஆனால் அதில் புதுசு புதுசா யோசிச்சு செய்ய நிறைய வாய்ப்புகள் இருந்தது. அதுக்கு மாஸ்டர் சரியா இருப்பார்னு நினைச்சேன். அவரிடம் எனக்கு பிடிச்சது அவரோட ஹியூமர் டச். அதுக்காகவே இந்த படத்தை இயக்க அவரை அழைத்தேன். மாஸ்டரும் சம்மதிச்சார். அவருக்கு நன்றி என்ற விஷால் சொன்ன இன்னொரு விஷயம் கிளுகிளு ஏரியா.
இந்த படத்தில் விஷாலுக்கும் சமீராவுக்கும் ஒரு முத்தக்காட்சி இருக்கிறதாம். இதில் முப்பது டேக் வாங்கினார்களாம் இருவரும். சீன் படி பாத்ரூமிலிருந்து ஓடி வந்து முத்தம் கொடுக்கணும் அவங்க. ஆனால் அவங்களுக்கு லாங்வேஜ் புரியாது. அதனால் நிறைய டேக் வாங்கினாங்க. அதுவே எனக்கு சாதகமா அமைஞ்சுருச்சு என்றார் அடக்க முடியாத சிரிப்புடன்.
இதெல்லாம் இருக்கட்டும்… சமீரா ரெட்டியிடம் கேட்டார்களே ஒரு கேள்வி. எங்க ஊர்ல எந்த நடிகர் நடிகைகளும் சாதி பெயரை பின்னாடி சேர்த்துக் கொள்வதில்லை. ஆனால் நீங்க மட்டும் என்ன சமீரா ரெட்டின்னு ரெட்டியை சேர்த்துக்கிறீங்க?
அதற்கும் பதில் சொன்னார் சமீரா. எங்க குடும்பமே ரெட்டி குடும்பம்தான். நான் பிறந்ததிலிருந்தே என்னை சமீரா ரெட்டின்னுதான் கூப்பிடுறாங்க. இப்படி சொல்லிக்கிறதில் எனக்கு மிகவும் பெருமை என்றார்.
சாச்சுப்புட்டாங்களே மச்சான்…

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சாதி சப்போர்ட் தர்றோம்… சூர்யாவை மயக்கிய தலைவர்கள்
» பிரபுதேவாவின் இச்!
» போருடா… பிரபுதேவாவின் ஆல்பம்
» பிரபுதேவாவின் ராம்போ ராஜ்குமார்
» நிறைவேறியதா பிரபுதேவாவின் கனவு?!
» பிரபுதேவாவின் இச்!
» போருடா… பிரபுதேவாவின் ஆல்பம்
» பிரபுதேவாவின் ராம்போ ராஜ்குமார்
» நிறைவேறியதா பிரபுதேவாவின் கனவு?!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum