கிருஷ்ணலீலை : சீறும் செல்வன் !
Page 1 of 1
கிருஷ்ணலீலை : சீறும் செல்வன் !
ஜீவன், மேக்னாராஜ் நடித்து இருக்கும் படம் ‘கிருஷ்ணலீலை’. இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் இதர பணிகள் முடிந்தாலும் படம் வெளிவருவதில் பல்வேறு சிக்கல்கள் நீடித்து வருகிறது.
படத்தின் தயாரிப்பாளரான புஷ்பா கந்தசாமியிடம் படத்தின் இயக்குனர் செல்வன் கேட்டபோது, தனக்கும் படத்திற்கும் சம்பந்தம் இல்லை என்றும் படத்தினை ஐங்கரன் நிறுவனத்தினடம் முழுவதும் கொடுத்து விட்டதாகவும் கூறினார். இதனால் இயக்குனர் செல்வன் படத்தை வெளியிடும் வரை காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்க போவதாக அறிவித்தார்.
தயாரிப்பாளர்கள் தாங்கள் ஐங்கரன் நிறுவனத்திடம் பேசி முடிவு எடுப்பதாகவும் செப். 15ம் தேதி வரை பொறுத்து இருக்குமாறும் கூறவே, தனது போராட்டத்தை கைவிட்டு இருக்கிறார்.
இந்நிலையில் இயக்குனர் செல்வன் பேசிய போது ” கிருஷ்ணலீலை எனது கனவுப்படம். படப்பிடிப்பு முடிந்து இவ்வளவு நாட்கள் ஆகியும் வெளியிட காலம் தாழ்த்தி கொண்டே வருகிறார்கள். 2008ம் ஆண்டு வந்திருக்க வேண்டிய படம் அது.
இப்பொழுது அரசு கொண்டு வந்து இருக்கும் சமச்சீர் கல்வியை நான் 2008ம் ஆண்டே கிருஷ்ணலீலை படத்தில் கூறி இருக்கிறேன். படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் சமச்சீர் கல்வி என்றால் என்ன? அது எப்படி இருக்க வேண்டும் என்று தீர்வு கூறி இருக்கிறேன்.
தற்போது நடந்து வரும் அரசியல் மாற்றங்கள் உள்ளிட்டவற்றை பார்க்கும் போது இந்த சமயத்தில் எனது படம் வெளிவந்தால் நன்றாக இருக்கும்.
ஆனால் ஐங்கரன் நிறுவனம் ‘கிருஷ்ணலீலை’ படத்திற்கு முன்பாக ‘களவாடிய பொழுதுகள்’ படத்தினை வெளியிட முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக செய்திகள் வலம் வருகின்றன.
அவ்வாறு வெளியிட திட்டமிட்டால் கோர்ட்டில் வழக்கு தொடருவேன். செப். 15ம் தேதி வரைக்கும் தான் பொறுமையாக இருப்பேன். அதன் பின்பு கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளேன்.
படம் எடுத்து முடித்த போதே வெளியிட்டு இருந்தால் இந்த நேரம் ஒரு புரட்சிகரமான இயக்குனராக ஆகி இருப்பேன். எனது வாழ்க்கையே மாறி இருக்கும் ” என்று தெரிவித்தார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தேர்தல் நேரத்தில் சூட்டைக் கிளப்புமா கிருஷ்ணலீலை?
» பத்துவீடு இருந்தா தப்பா? – சீறும் ப்ரியங்கா
» ‘பட வாய்ப்புக்காக அழுபவள் அல்ல நான்!’-சீறும் அசின்
» சீமானின் அணுகுமுறை தப்பு சேரனின் பதிலால் சீறும் தம்பிகள்…
» பொன்னியின் செல்வன் -1,2

Permissions in this forum:
You cannot reply to topics in this forum