தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஸ்வரூபம் படத்தை டி.டி.எச். சேவையில் ஒளிபரப்ப தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு

Go down

விஸ்வரூபம் படத்தை டி.டி.எச். சேவையில் ஒளிபரப்ப தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு Empty விஸ்வரூபம் படத்தை டி.டி.எச். சேவையில் ஒளிபரப்ப தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு

Post  ishwarya Sat Mar 23, 2013 2:12 pm



விஸ்வரூபம் படத்தை டி.டி.எச். சேவை மூலம் டி.வி.யில் ஒளிபரப்ப தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பில் அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள விஸ்வரூபம் படத்தை டி.டி.எச். மூலம் டி.வி.யில் ஒளிபரப்புவது என கமல் தரப்பு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன் மூலம் விஸ்வரூபம் படம் திருட்டு வி.சி.டியில் வருவது தடுக்கப்படும் என்பதும் தியேட்டர்களுக்கு வராமல் வீட்டில் சி.டி.-யில் படம் பார்ப்பவர்களையும் படம் பார்க்கச் செய்துவிடலாம் என்பதும் கமலின் திட்டம் என்று கூறப்படுகிறது.

கமல் தரப்பினரிடம் பெரும் தொகை கொடுத்து வாங்கும் டி.டி.எச் நிறுவனத்தினர் இப் படத்தை டி.வி.யில் பார்க்க டி.டி.எச் சேவை வைத்திருப்பவர்களின் வீடுகளில் இரு இணைப்புக்கு நுற்றுக் கணக்கில் வசூலிப்பார்கள். இதற்கான ஸ்கிராச் கார்டுகளை கடைகளில் பணம் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம்.

இவ்வாறு டி.டி.எச் சேவை நிறுவனத்துக்கு பட ஒளிபரப்பு உரிமம் வழங்கினால் தியேட்டர்களுக்கு படம் பார்க்க வருபவர்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து விடும் என தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஆலோசிக்க தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்களின் அவசரக் கூட்டம் தேனாம்பேட்டையில் உள்ள சங்க அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தின் முடிவில் இந்த விவகாரம் குறித்து தமிழக முதல்வரை சந்தித்து மனு அளிப்பது என முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» விஸ்வரூபம் படத்தை திரையிட தியேட்டர் அதிபர்கள் போட்டி: சென்னையில் 30 திரையரங்கில் ரிலீஸ்
» விஸ்வரூபம் படத்தை தியேட்டரில் திரையிட விடமாட்டோம்! தியேட்டர் உரிமையாளர்கள் அறிவிப்பு!!
» ஜீவாவிடம் ரூ.65 லட்சம் நஷ்டஈடு கேட்டு தியேட்டர் அதிபர்கள் போர்க்கொடி!
» தியேட்டர் அதிபர்கள் அவசர ஆலோசனை: சினிமா கட்டணத்தை உயர்த்த கோரிக்கை
» விஸ்வரூபம்… தியேட்டர் கிடைப்பதில் சிக்கல்… சொந்தமாக ரிலீஸ் செய்கிறார் கமல்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum