எப்படி கவிஞரானேன்? – தனுஷ் விளக்கம்
Page 1 of 1
எப்படி கவிஞரானேன்? – தனுஷ் விளக்கம்
மயக்கம் என்ன படத்தின் பாடல் வெளியிட்டு விழாவை அதிக ஆர்ப்பாட்டமில்லாமல் நடத்தி முடித்த செல்வராகவன்-தனுஷ்-ரிச்சா குழுவினர், அதன்பின் சில தினங்கள் கழித்து பத்திரிகையாளர்களை சந்தித்தார்கள். வரும்போதே மவுன லேகியம் சாப்பிட்டு வந்திருப்பார் போல. எந்தவொரு கேள்விக்கும் இரண்டு வரிகளுக்கு மிகாமல் பதிலளித்துக் கொண்டிருந்தார் செல்வராகவன். அதிலும் சில கேள்விகளுக்கு ஒரு வார்த்தையில் அவர் சொன்ன பதில் ஷார்ப்.
படத்தில் வரும் ஒரு பாடலை செல்வாவும் தனுஷும் இணைந்தே பாடியிருக்கிறார்கள். அவர் வருவதற்கு சற்று முன்புவரை அந்த ஹாலில் ஒலித்த அந்த பாடல் இன்றைய இளசுகளை சுண்டி இழுக்கும் டைப். அப்படியிருந்தும், இனிமே சத்தியமா பாட மாட்டேன். மன்னிச்சுக்கோங்க என்று செல்வராகவன் புலம்பியதுதான் ஏனென்றே புரியவில்லை. ஏன் நீங்க பாடுனது உங்களுக்கே பிடிக்கலையா என்ற கேள்விக்கு, ரொம்ப நாராசமா இருந்திச்சு என்றார் அவர்.
அருகிலிருந்த மயக்கம் என்ன பட இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் படத்தில் ஒரு குடிகாரன் பாடுவது போன்ற சுச்சுவேஷன் அது. அதனால் இப்படி ஒரு குரல் இருந்தா பொறுத்தமா இருக்குமேன்னு செல்வாவை பாட வைத்தேன் என்றார். சில பாடல்களை தனுஷும் எழுதியிருக்கிறராம். .
எனக்கு ஏற்கனவே கதை தெரியும். அதனால் இந்த பாடலை எழுதுவதற்கு கவிஞர்களை தேடியபோது நானே எழுதுறேன். நல்லாயிருந்தா யூஸ் பண்ணுங்க. இலலைன்னா விட்டுடலாம் என்றேன். அப்புறம் நான் எழுதிய பாடல் வரிகளில் கொஞ்சம் கரெக்ஷன் பண்ணி என்னையும் கவிஞராக்கிட்டார் செல்வா என்றார் தனுஷ்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பெண்களை இழிவுபடுத்தவில்லை – தனுஷ் விளக்கம்
» ‘குட்டி’க்கு ஒத்துழைக்க மறுப்பா? – தனுஷ் விளக்கம்
» சச்சினின் பேட் கிடைத்தது எப்படி: த்ரிஷா விளக்கம்
» முதல் உதவி செய்வது எப்படி? முழுமையான தகவல்கள் இணைப்பு படங்களுடன் விளக்கம்
» நமக்கு கெட்ட காலம் வரப்போவதை எப்படி தெரிந்துகொள்வது? அதை எப்படி தவிர்ப்பது?
» ‘குட்டி’க்கு ஒத்துழைக்க மறுப்பா? – தனுஷ் விளக்கம்
» சச்சினின் பேட் கிடைத்தது எப்படி: த்ரிஷா விளக்கம்
» முதல் உதவி செய்வது எப்படி? முழுமையான தகவல்கள் இணைப்பு படங்களுடன் விளக்கம்
» நமக்கு கெட்ட காலம் வரப்போவதை எப்படி தெரிந்துகொள்வது? அதை எப்படி தவிர்ப்பது?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum