மிளகு குழம்பு
Page 1 of 1
மிளகு குழம்பு
சீரகம்
மிளகு
பூண்டு
தேவையானப்பொருட்கள்:
- மிளகு – 1 டேபிள்ஸ்பூன்
- சீரகம் – 1/2 டேபிள்ஸ்பூன்
- முழுப்பூண்டு – 1
- புளி- சிறிய எலுமிச்சம்பழ அளவு
- சாம்பார் பொடி – 1 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
- நல்லெண்ணை – 2 அல்லது 3 டேபிள்ஸ்பூன்
- கடுகு – 1/2 டீஸ்பூன்
- கறிவேப்பிலை – சிறிது
- சாம்பார் வெங்காயம் – 5 அல்லது 6
- உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
செய்முறை:
- புளியை ஊறவைத்து, கரைத்து ஒரு கப் அளவிற்கு புளித்தண்ணீரை எடுத்து
அதில் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலக்கி வைத்துக்
கொள்ளவும். - வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டை தோலுரித்து,
பூண்டுப்பற்களை தனியாக எடுத்து வைக்கவும். பத்து முதல் பதினைந்து
பூண்டுப்பற்கள் போதுமானது. - ஒரு வாணலியில், ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு, முதலில் மிளகையும்,
பின்னர் சீரகத்தையும் தனித்தனியாக வறுத்து எடுக்கவும். மேலும் ஒரு டீஸ்பூன்
எண்ணை விட்டு, பூண்டைப் போட்டு, நன்றாக சிவக்கும் வரை வதக்கி எடுத்து,
மிளகு, சீரகம் ஆகியவற்றுடன் சேர்த்து மை போல் அரைத்து வைத்துக் கொள்ளவும். - அடி கனமான வாணலி அல்லது பாத்திரத்தை அடுப்பில் வைத்து, மீதி எண்ணையை
விடவும். அதில் கடுகைப் போட்டு வெடிக்க விடவும். கடுகு வெடிக்க
ஆரம்பித்ததும், வெங்காயம், கறிவேப்பிலைப் போட்டு சிறிது வதக்கவும். அதில்
கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை விட்டு கொதிக்க விடவும். குழம்பு கொதிக்க
ஆரம்பித்ததும், அதில் அரைத்து வைத்துள்ள மிளகு விழுதைப் போட்டு, அத்துடன்
சிறிது தண்ணீரையும் சேர்த்து நன்றாகக் கலக்கி விடவும். மீண்டும் ஒரு கொதி
வரும் வரை அடுப்பில் வைத்திருந்துப் பின்னர் இறக்கி வைக்கவும். - மிளகிற்கு, உடல் வெப்பத்தை அதிகரிக்கும் சக்தி உண்டு. அதனால், குளிர்
அல்லது மழைக்காலங்களின் பொழுது, இந்தக் குழம்பைச் செய்து, சூடான சாதத்துடன்
சேர்த்துச் சாப்பிடலாம். சுட்ட அப்பளம் இதற்குப் பக்கத் துணை. - இட்லி, தோசைக்கும் தொட்டுக் கொள்ள சுவையாயிருக்கும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum