சுண்டைக்காய் பொரிச்சக் குழம்பு
Page 1 of 1
சுண்டைக்காய் பொரிச்சக் குழம்பு
சுண்டைக்காய்
மஞ்சள்
காய்ந்த மிளகாய்
தேவையானப்பொருட்கள்:
- சுண்டைக்காய் – 2 கப்
- துவரம் பருப்பு – 1/2 கப்
- சாம்பார் பொடி.
- மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
- காய்ந்த மிளகாய் – 2
- கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்
- தனியா – 1 டீஸ்பூன்
- தேங்காய்த்துருவல் – 1 டேபிள்ஸ்பூன்
- உப்பு- 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
தாளிக்க:
- நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
- கடுகு- 1/2 டீஸ்பூன்
- பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
- வெங்காயம் நறுக்கியது – 1 டேபிள்ஸ்பூன்
- கறிவேப்பிலை – சிறிது
செய்முறை:
- சுண்டைக்காயின் காம்பைக் கிள்ளி விட்டு, இரண்டாக வெட்டி தண்ணீரில் போட்டு வைக்கவும்.
- துவரம் பருப்பை, சிறிது மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.
- ஒரு வாணலியில் சிறிது எண்ணை விட்டு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய்,
தனியா ஆகியவற்றை வறுத்து, ஆறியபின், அத்துடன் தேங்காய்த்துருவலைச் சேர்த்து
அரைத்துக் கொள்ளவும். - சுண்டைக்காயைத் தண்ணீரிலிருந்து எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு,
அதில் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு போட்டு அத்துடன் காய் மூழ்கும்
அளவிற்கு தண்ணீரை ஊற்றி, மிதமான தீயில் வேகவிடவும். - காய் வெந்த பிறகு, வேக வைத்த பருப்பைச் சேர்த்துக் கிளறி, ஒரு கொதி
வரும் வரை மிதமான தீயில் வைக்கவும். பின்னர், அரைத்து வைத்துள்ள தேங்காய்
விழுதைச் சேர்த்துக் கலக்கி விட்டு ஓரிரு வினாடிகள் கொதிக்க விடவும். - கடைசியில், கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம், பெருங்காயம் ஆகியவற்றைத் தாளித்துக் கொட்டவும்.
- துவரம் பருப்பிற்குப் பதில், பயத்தம்பருப்பையும் இதில் சேர்த்து செய்யலாம்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சுண்டைக்காய் பொரிச்சக் குழம்பு
» சுண்டைக்காய் பொரிச்சக் குழம்பு
» சுண்டைக்காய் அவல் கறி
» சுண்டைக்காய் துவையல்
» சுண்டைக்காய் புளி கறி
» சுண்டைக்காய் பொரிச்சக் குழம்பு
» சுண்டைக்காய் அவல் கறி
» சுண்டைக்காய் துவையல்
» சுண்டைக்காய் புளி கறி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum