சுண்டைக்காய் பொரிச்சக் குழம்பு
Page 1 of 1
சுண்டைக்காய் பொரிச்சக் குழம்பு
தேவையானப்பொருட்கள்:
சுண்டைக்காய் – 2 கப்
துவரம் பருப்பு – 1/2 கப்
சாம்பார் பொடி.
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்
தனியா – 1 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் – 1 டேபிள்ஸ்பூன்
உப்பு- 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
தாளிக்க:
நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு- 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
வெங்காயம் நறுக்கியது – 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
செய்முறை:
சுண்டைக்காயின் காம்பைக் கிள்ளி விட்டு, இரண்டாக வெட்டி தண்ணீரில் போட்டு வைக்கவும்.
துவரம் பருப்பை, சிறிது மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் சிறிது எண்ணை விட்டு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், தனியா ஆகியவற்றை வறுத்து, ஆறியபின், அத்துடன் தேங்காய்த்துருவலைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
சுண்டைக்காயைத் தண்ணீரிலிருந்து எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு போட்டு அத்துடன் காய் மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்றி, மிதமான தீயில் வேகவிடவும்.
காய் வெந்த பிறகு, வேக வைத்த பருப்பைச் சேர்த்துக் கிளறி, ஒரு கொதி வரும் வரை மிதமான தீயில் வைக்கவும். பின்னர், அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதைச் சேர்த்துக் கலக்கி விட்டு ஓரிரு வினாடிகள் கொதிக்க விடவும்.
கடைசியில், கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம், பெருங்காயம் ஆகியவற்றைத் தாளித்துக் கொட்டவும்.
துவரம் பருப்பிற்குப் பதில், பயத்தம்பருப்பையும் இதில் சேர்த்து செய்யலாம்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» சுண்டைக்காய் பொரிச்சக் குழம்பு
» சுண்டைக்காய் பொரிச்சக் குழம்பு
» சுண்டைக்காய் அவல் கறி
» சுண்டைக்காய் துவையல்
» சுண்டைக்காய் புளி கறி
» சுண்டைக்காய் பொரிச்சக் குழம்பு
» சுண்டைக்காய் அவல் கறி
» சுண்டைக்காய் துவையல்
» சுண்டைக்காய் புளி கறி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum