கார்த்திகை அப்பம்
Page 1 of 1
கார்த்திகை அப்பம்
தேவையானப்பொருட்கள்:
செய்முறை:
- அரிசிமாவு – 1 கப்
- வெல்லப்பொடி – 1/2 முதல் 3/4 கப் வரை
- நன்கு கனிந்த வாழைப்பழம் – 1
- பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் – 1 அல்லது 2 டேபிள்ஸ்பூன்
- ஏலக்காய்த் தூள் – 1/2 டீஸ்பூன்
- நல்லெண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
- 1/2 கப் தண்ணீரில் வெல்லத்தைப் போட்டு கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
- வாழை பழத்தை நன்றாக மசித்துக் கொள்ளவும்.
- அரிசிமாவு, மசித்த வாழைப்பழம், தேங்காய்த் துண்டுகள், ஏலக்காய்த்தூள்
ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, அதில் வெல்ல நீரை விட்டு இட்லி மாவு பதத்திற்கு
கரைத்துக் கொள்ளவும். தேவையானால் சிறிது நீரையும் சேர்த்துக் கொள்ளலாம். - ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் அதில் ஒரு டேபிள்ஸ்பூன் மாவை
எடுத்து ஊற்றவும். பொன்னிறமாக சிவக்கும் வரை பொரித்து எடுக்கவும். - அரிசிமாவிற்குப்பதில், மைதா அல்லது கோதுமை மாவிலும், ரவாவிலும் கூட
இந்த அப்பத்தை செய்யலாம். அல்லது எல்லா மாவிலும் கொஞ்சம் கொஞ்சம்
சேர்த்தும் செய்யலாம். வெல்லத்திற்கு பதில் சர்க்கரையையும் பயன்
படுத்தலாம். அப்பம் வெள்ளையாக இருக்கும். - மேலும், இதை எண்ணையில் பொரித்தெடுப்பதற்குப் பதில், குழிப்பணியாரச் சட்டியிலும் பணியாரம் செய்வதுபோல் சுட்டெடுக்கலாம்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கார்த்திகை அப்பம்
» கார்த்திகை அப்பம்
» அப்பம் (வெள்ளையப்பம்)அப்பம் சாப்பிட்டு நீண்ட நாட்களாச்சு. பாலப்பம், முட்டையப்பம் என்று அந்தநாளில் சாப்பிட்டதெல்லாம் நினைவில் வந்ததால், அப்பம் செய்து சாப்பிட ஆசையும் வந்துவிட்டது. தேவையான பொருட்கள் இரண்டு கிண்ணம் வெள்ளை அரிசிமா ஒரு கிண்ணம் கோதுமை மா ஒன்றர
» அப்பம்
» சுஜி அப்பம்
» கார்த்திகை அப்பம்
» அப்பம் (வெள்ளையப்பம்)அப்பம் சாப்பிட்டு நீண்ட நாட்களாச்சு. பாலப்பம், முட்டையப்பம் என்று அந்தநாளில் சாப்பிட்டதெல்லாம் நினைவில் வந்ததால், அப்பம் செய்து சாப்பிட ஆசையும் வந்துவிட்டது. தேவையான பொருட்கள் இரண்டு கிண்ணம் வெள்ளை அரிசிமா ஒரு கிண்ணம் கோதுமை மா ஒன்றர
» அப்பம்
» சுஜி அப்பம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum