சுரைக்காய் பருப்பு
Page 1 of 1
சுரைக்காய் பருப்பு
தேவையானப்பொருட்கள்:
தாளிக்க:
செய்முறை:
- சுரைக்காய் – ஒன்று
- துவரம் பருப்பு – ஒரு கப்
- வெங்காயம் – ஒன்று
- தக்காளி – ஒன்று
- பச்சை மிளகாய் – ஐந்து
- மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
- மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி
- தனியா தூள் – அரை தேக்கரண்டி
தாளிக்க:
- எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
- கடுகு – அரை தேக்கரண்டி
- சீரகம் – ஒரு தேக்கரண்டி
- கறிவேப்பிலை – ஒரு கொத்து
செய்முறை:
- துவரம் பருப்பை மூன்று கப் தண்ணீர், பச்சை மிளகாய் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
- வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். சுரைக்காயை கழுவி மிதமான துண்டுகளாக அரிந்துக் கொள்ளவும்.
- வேகவைத்த துவரம் பருப்புடன் நறுக்கிய சுரைக்காய் துண்டுகளை போட்டு பத்து நிமிடம் வேக வைக்கவும்.
- பின்னர் மிளகாய் பொடி மற்றும் தனியா பொடி சேர்த்து மேலும் பத்து நிமிடம் வேக வைக்கவும்.
- ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம் போட்டு
தாளித்து, கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை மற்றும் வெங்காயத்தை போட்டு
வதக்கவும். - வெங்காயம் பொன்னிறமானதும், தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி
வதங்கியவுடன் வேகவைத்த பருப்பு கலவையை சேர்த்து கொதி வந்தவுடன் அடுப்பை
அணைத்து விடவும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum