சுரைக்காய் பருப்பு
Page 1 of 1
சுரைக்காய் பருப்பு
தேவையானப்பொருட்கள்:
சுரைக்காய் – ஒன்று
துவரம் பருப்பு – ஒரு கப்
வெங்காயம் – ஒன்று
தக்காளி – ஒன்று
பச்சை மிளகாய் – ஐந்து
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி
தனியா தூள் – அரை தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை – ஒரு கொத்து
செய்முறை:
துவரம் பருப்பை மூன்று கப் தண்ணீர், பச்சை மிளகாய் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். சுரைக்காயை கழுவி மிதமான துண்டுகளாக அரிந்துக் கொள்ளவும்.
வேகவைத்த துவரம் பருப்புடன் நறுக்கிய சுரைக்காய் துண்டுகளை போட்டு பத்து நிமிடம் வேக வைக்கவும்.
பின்னர் மிளகாய் பொடி மற்றும் தனியா பொடி சேர்த்து மேலும் பத்து நிமிடம் வேக வைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம் போட்டு தாளித்து, கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை மற்றும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமானதும், தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கியவுடன் வேகவைத்த பருப்பு கலவையை சேர்த்து கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum