பீர்க்கங்காய் சட்னி
Page 1 of 1
பீர்க்கங்காய் சட்னி
தேவையானப்பொருட்கள்:
செய்முறை:
- பீர்க்கங்காய் –1/4கிலோ( தோலை மேலோட்டமாக சீவி சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்)
- காயந்த மிளகாய் – 3 நம்பர்
- உளுந்தம் பருப்பு – 1/2 கை அளவு
- சின்ன வெங்காயம் – 1கப்
- தக்காளி – 3
- கொத்தமல்லி தழை – 1/4கப்
- கறிவேப்பிலை – 1/4கப்
- நல்லெண்ணெய் – தாளிப்பதற்கு ஏற்ப
- உப்பு – தேவையான அளவு
செய்முறை:
- வாணலியில் 1தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி உளுந்தம் பருப்பு, காய்ந்த
மிளகாய், கறிவேப்பிலை, ஆகியவற்றை சேர்த்து சிவக்க வறுத்தெடுத்து தனியே
வைத்துக் கொள்ளவும். - மறுபடியும் வாணலியில் எண்ணெய் ஊற்றி பீர்க்கங்காய் துண்டுகளை சேர்த்து சிறு நேரம் வதக்கவும்.
- பின்பு அதனுடன் வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து சுருங்கி வரும் வரை வதக்கவும்.
- வதக்கியவுடன் அடுப்பை அணைத்து விட்டு ஆற விடவும்.
- மிக்ஸியில் சிவக்க வறுத்தெடுத்த உளுந்தம் பருப்பு கலவையும், ஆற வைத்த
பீர்க்கங்காய் கலவையும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். - இக்கலவை ஆட்டுகல்லிலும் அரைக்கலாம். மிக்ஸியை விட இது மிகவும் சுவையாக இருக்கும்.
- சுவையான பீர்க்கங்காய் சட்னி தயார்.
- இச்சட்னி மிகவும் சுவையாக இருக்கும். பீர்க்கங்காய் பிடிக்காதவர்கள்
கூட இதை செய்து வைத்தால் சாப்பிடுவார்கள். பீர்க்கங்காய்க்கு பதிலாக காரட்,
பீட்ரூட், புடலங்காய், வெண்டைக்காய், கத்திரிக்காய் ஆகியவற்றையும்
சேர்க்கலாம்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பீர்க்கங்காய் சட்னி
» பீர்க்கங்காய் பீர்க்கங்காய்
» பீர்க்கங்காய் பீர்க்கங்காய்
» பீர்க்கங்காய் கூட்டு
» பீர்க்கங்காய் துவையல்
» பீர்க்கங்காய் பீர்க்கங்காய்
» பீர்க்கங்காய் பீர்க்கங்காய்
» பீர்க்கங்காய் கூட்டு
» பீர்க்கங்காய் துவையல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum