தட்டைபயறு கத்திரிக்காய்
Page 1 of 1
தட்டைபயறு கத்திரிக்காய்
தேவையானப்பொருட்கள்:
செய்முறை:
- தட்டைபயறு- 100 கிராம்
- கத்திரிக்காய் – 200 கிராம்
- வெங்காயம் – 2
- தக்காளி -2
- பச்சை மிளகாய்- 2
- பூண்டு – 4 பல்
- மிளகாய்த்தூள் – அரைஸ்பூன்
- சீரகத்தூள் – அரைஸ்பூன்
- மஞ்சள்தூள் – அரைஸ்பூன்
- மல்லித்தூள்- ஒரு டீஸ்பூன்
- எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
- கடுகு – தலா அரைஸ்பூன்
- உளுத்தம் பருப்பு – தலா அரைஸ்பூன்
- மல்லி தழை -சிறிது
- கறிவேப்பிலை -சிறிது
- தேங்காய் – 2 டேபிள்ஸ்பூன்
- முந்திரி பருப்பு -2
- உப்பு – தேவைக்கு
செய்முறை:
- முதலில் கத்திரிக்காய், வெங்காயம், தக்காளி நறுக்கி வைக்கவும். பூண்டை
தட்டி வைக்கவும், மிளகாய் கீறிக்கொள்ளவும். தேங்காய் முந்திரி அரைத்து
வைக்கவும். - தட்டைபயறை லேசாக வறுத்து ஊற வைத்து குக்கரில் மூழ்கும் அளவு தண்ணீர்,
தேவைக்கு உப்பு சேர்த்து 2 விசில் வைத்து இறக்கவும். வெந்து விடும். - வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு
சேர்த்து வெடித்ததும் கருவேப்பிலை, வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி,
கத்திரிக்காய் சேர்த்து வதக்கி சிறிது உப்பு போட்டு மூடி நன்கு வேக
விடவும். - கத்திரிக்காய் வெந்த பின்பு, மசாலா வகைகளை சேர்த்து பிரட்டி சிறிது தண்ணீர் தெளிக்கவும்.
- பின்பு வேகவைத்த தட்டைபயறை வெந்த தண்ணீருடன் சேர்க்கவும். கொதி வரவும் தீயை குறைத்து சிறிது நேரம் வைக்கவும்.
- அத்துடன் அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும். தேவைப்பட்டால் ஒரு கப் தண்ணீர் சேர்க்கவும்.
- தட்டைபயறு, கத்திரிக்காய், தேங்காய், மசாலா சேர்த்து கொதித்து நல்ல குழம்பு மணம் கமகமக்கும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தட்டைபயறு கத்திரிக்காய்
» தட்டைபயறு கத்திரிக்காய்
» கத்திரிக்காய் ரஜ்மா கறி
» கத்திரிக்காய்
» கத்திரிக்காய் கொஸ்து
» தட்டைபயறு கத்திரிக்காய்
» கத்திரிக்காய் ரஜ்மா கறி
» கத்திரிக்காய்
» கத்திரிக்காய் கொஸ்து
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum