மரவள்ளிக்கிழங்கு கூட்டு
Page 1 of 1
மரவள்ளிக்கிழங்கு கூட்டு
தேவையானப்பொருட்கள்:
செய்முறை:
- மரவள்ளிக்கிழங்கு-கிலோ
- தேங்காய்த்துருவல் -3டேபிள்ஸ்பூன்
- மஞ்சள் தூள்- அரைடீஸ்பூன்
- வெங்காயம் – 1பெரியது
- நல்லெண்ணெய் -2டேபிள்ஸ்பூன்
- கடுகு -அரைடீஸ்பூன்
- மிளகாய் வற்றல் - 3
- கறிவேப்பிலை- 2இணுக்கு
- உப்பு- தேவைக்கு.
செய்முறை:
- மரவள்ளிக்கிழங்கை நன்கு மண் போக அலசி சிறிது நேரம் தண்ணீரில் போட்டு எடுக்கவும்.
- சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும், தண்ணீரில் போட்டு எடுத்தால் ஈசியாக கட் செய்யலாம். சீக்கிரம் வெந்தும் விடும்.
- துண்டு போட்ட கிழங்கை ஸ்டீமரில் அல்லது குக்கர் அல்லது இட்லி பாத்திரத்தில் 20-30நிமிடங்கள் வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
- அவித்த கிழங்கை தோல் உரித்து கொள்ளவும். அவித்த கிழங்கை உப்பு கூட சேர்க்காமல் அப்படியேயும் சாப்பிடலாம்.
- கிழங்கு ஆறியவுடன் இப்படி துருவிக்கொள்ளவும்.
- துருவிய கிழங்கில் தேங்காய் துருவல், மஞ்சள் தூள், சிறிது உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, மிளகாய்வற்றல், கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும்.
- துருவி ரெடி செய்த கிழங்கை சேர்த்து பிரட்டவும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வெள்ளைப்பூசணிக்காய் கூட்டு
» மரவள்ளிக்கிழங்கு கூட்டு
» வெள்ளைப்பூசணிக்காய் கூட்டு
» வெள்ளைப்பூசணிக்காய் கூட்டு
» மரவள்ளிக்கிழங்கு கூட்டு
» மரவள்ளிக்கிழங்கு கூட்டு
» வெள்ளைப்பூசணிக்காய் கூட்டு
» வெள்ளைப்பூசணிக்காய் கூட்டு
» மரவள்ளிக்கிழங்கு கூட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum