தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சீரகப் பொடி

Go down

சீரகப் பொடி                                   Empty சீரகப் பொடி

Post  ishwarya Sat Apr 13, 2013 1:13 pm

தேவையானப்பொருட்கள்:

சீரகம் – 100 கிராம்
இஞ்சி – 50 கிராம்
எலுமிச்சை பழம் – 15 (அ) 20
ஏலக்காய் – 10 கிராம் (தோல் நீக்கியது)
கற்கண்டு – 100 கிராம்

செய்முறை:

இஞ்சியை நன்றாக அலசி தோலை நீக்கி சாறு எடுக்கவேண்டும்.
ஒரு கிண்ணத்தில் சீரகத்தை எடுத்துக்கொள்ளவும். அதனுடன் இஞ்சி சாறை ஊற்ற வேண்டும்.
தொடர்ந்து எலுமிச்சை சாறை பிழிந்து விடவேண்டும்.
சீரகம் நன்றாக இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறில் மூழ்கி இருக்கும் அளவிற்கு பார்த்துக் கொள்ளவும். இதனை 24 மணிநேரம் அப்படியே ஊற வைக்க வேண்டும்.
பிறகு சீரகத்தை தனியே வடித்து எடுத்து வெயில் நேரடியாக படாத அளவில் உலர்த்த வேண்டும் (24 மணி நேரம்).
மீதமுள்ள அதே இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறில் உலர்த்திய அதே சீரகத்தை போட்டு ஊற வைக்க வேண்டும்.
இப்படி அந்த சாறு முழுமையாக வற்றும் வரை தொடர்ந்து 5 அல்லது 6 நாள் இப்படி செய்து கொள்ள வேண்டும்.
உலர்த்தப்பட்ட சீரகத்துடன் ஏலக்காய், கற்கண்டு ஆகியவற்றை சேர்த்து மிக்ஸி அல்லது உரலில் போட்டு அரைத்து எடுக்கவும்.
இதனை இரண்டு தடவை சலித்து எடுக்கவும்.
சீரகப்பொடி தயார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum