உருளைக்கிழங்கு கறி
Page 1 of 1
உருளைக்கிழங்கு கறி
தேவையான பொருள்கள்:
உருளைக்கிழங்கு = அரை கிலோ
வெங்காயம் = 100 கிராம்
தக்காளி = 100 கிராம்
இஞ்சி = சிறு துண்டு
சீரகம் = அரை ஸ்பூன்
மிளகாய் பொடி = 2 ஸ்பூன்
மஞ்சள் பொடி = கால் ஸ்பூன்
எண்ணெய் = 5 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
உருளைக்கிழங்கை வேக வைத்து உரித்து தேவையான அளவில் துண்டு போட்டுக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கவும். இஞ்சியை தோல் சீவி விட்டு தட்டிக் கொள்ளவும்.
எண்ணெயை காய வைத்து சீரகம் சேர்க்கவும். இது வெடித்ததும் வெங்காயம், தட்டிய இஞ்சி சேர்த்து வதக்கவும். வெங்காயம் பாதி வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
இரண்டும் வதங்கியதும் உருளைக்கிழங்கை சேர்த்து மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து 5 நிமிடம் கிளறவும்.
தண்ணீர் தேவைப்பட்டால் சிறிது தெளிக்கவும். கிளறி இறக்கும் போது கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிது சேர்த்து கிளறி பரிமாறவும்.
சுவையான உருளைக்கிழங்கு கறி தயார். இதை ரைஸ், சப்பாத்தி, பரோட்டா நூடுல்ஸ் ஆகியவற்றோடு பரிமாறலாம்.
மருத்துவ குணங்கள்:
உருளைக்கிழங்கில் வைட்டமின் A, வைட்டமின் C, வைட்டமின் B6, தாமிரம், மாங்கனீசு, மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.
உருளைக்கிழங்கு ஆற்றல் உற்பத்திக்கு மிகவும் சிறந்த உணவு. இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும். செரிமானம், வயிற்று புண்கள் மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» உருளைக்கிழங்கு கறி
» உருளைக்கிழங்கு கறி
» உருளைக்கிழங்கு சாதம்
» உருளைக்கிழங்கு காரக்கறி
» உருளைக்கிழங்கு சாதம்
» உருளைக்கிழங்கு கறி
» உருளைக்கிழங்கு சாதம்
» உருளைக்கிழங்கு காரக்கறி
» உருளைக்கிழங்கு சாதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum