சிறுகீரை கறி
Page 1 of 1
சிறுகீரை கறி
தேவையான பொருள்கள்:
சிறுகீரை = 1 கட்டு
பாசிப்பருப்பு = 100 கிராம்
பெருங்காயப்பொடி = கால் ஸ்பூன்
வெங்காயம் = 2
தக்காளி = 2
பச்சை மிளகாய் = 2
மிளகாய் பொடி = அரை ஸ்பூன்
தனியா பொடி = கால் ஸ்பூன்
சீரகப்பொடி = அரை ஸ்பூன்
தேங்காய் துருவல் = 3 ஸ்பூன்
கடுகு = அரை ஸ்பூன்
உளுத்தம் பருப்பு = அரை ஸ்பூன்
எண்ணெய் = 2 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
சிறுகீரையை பொடியாக அரிந்து கழுவி நீர் வடிய விடவும். பாசிப்பருப்பை களைந்து நீரை வடித்து விட்டுப் பெருங்காயப் பொடி சேர்த்துக் கிளறி 1 மணி நேரம் ஊற விடவும். வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும்.
வாணலியில் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். இதை 2 நிமிடம் வதக்கிய பிறகு கீரையையும் சேர்த்து மேலும் சிறிது வதக்கவும்.
அடுத்து மிளகாய் பொடி, தனியா பொடி, சீரகப்பொடி, ஊறிய பாசிப்பருப்பு சேர்த்து கிளறி உப்பு சேர்த்து கால் கப் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து வேக விடவும்.
5 நிமிடம் கழித்துத் திறந்து தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறவும்.
பேனில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு சேர்க்கவும். கடுகு பொரிந்ததும் உளுத்தம் பருப்பு, கீறிய பச்சை மிளகாய் சேர்த்துத் தாளித்துக் கொட்டவும்.
சுவையானசிறுகீரை கறி தயார். இதை ரைஸ், சப்பாத்தி, பரோட்டா ஆகியவற்றோடு பரிமாறலாம்.
மருத்துவ குணங்கள்:
சிறுக்கீரையில் புரதம், மாவுப்பொருள், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் மற்றும் கலோரிகள் உள்ளது. இதனால் மலச்சிக்கல் குறையும். கண் எரிச்சல், கண் கட்டி, கண் காசம் போன்றவை குறையும். மலேரியா, டைஃபாய்டு, நீரிழிவு, உடல் பருமன், உடல் வீக்கம், உடல் சூடு போன்ற நோய்கள் குறையும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum