பேபி உருளைக்கிழங்கு கறி
Page 1 of 1
பேபி உருளைக்கிழங்கு கறி
தேவையான பொருள்கள்:
பேபி உருளைக்கிழங்கு = அரை கிலோ
இஞ்சி = அரை அங்குலம்
பூண்டு = 10 பல்
மிளகாய் பொடி = 1 ஸ்பூன்
சீரகம் = 1 ஸ்பூன்
சோம்பு = 1 ஸ்பூன்
எண்ணெய் = அரை கரண்டி
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
பேபி உருளைக்கிழங்கை 10 நிமிடம் ஊற விட்டு தேய்த்து அலம்பவும். இது சில சமயம் ஓரங்குல கனத்தில் இருக்கும். இதை மட்டும் இரண்டாக நறுக்கவும். இஞ்சி, பூண்டு தோல் நீக்கி அரைத்து விழுதாக்கி அதையும் மஞ்சள் பொடியையும் சேர்த்து உப்பு கலந்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் அதில் சீரகம் சேர்க்கவும். அடுத்து கறிவேப்பிலை சேர்த்து சடசடப்பு சப்தம் அடங்கியதும் மிளகாய் பொடி சேர்த்து 1 நிமிடம் கிளறவும்.
இவ்வாறு எண்ணெயில் மிளகாய் பொடியை வறுக்கும் போது உருளைக்கிழங்கிற்கு நல்ல நிறம் கிடைக்கும். இதனோடு ஊறும் உருளைக்கிழங்கை சேர்த்துக் கிளறி அரை கப் நீர் விட்டு மூடி வைக்கவும். தீ மிதமாக இருக்க வேண்டும்.
பின்பு திறந்து கிளறி விட்டு சோம்பைப் பொடி செய்து சேத்துக் கிளறி கிழங்கு நன்றாக ரோஸ்ட் ஆனதும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.
சுவையான பேபி உருளைக்கிழங்கு கறி தயார். இதை எல்லா விதமான ரைஸோடும் குறிப்பாக தயிர் சாதம், சாம்பார் சாதத்துடனும், நூடுல்ஸோடும் பரிமாறலாம்.
மருத்துவ குணங்கள்:
உருளைக்கிழங்கில் வைட்டமின் A, வைட்டமின் C, வைட்டமின் B6, தாமிரம், மாங்கனீசு, மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.
உருளைக்கிழங்கு ஆற்றல் உற்பத்திக்கு மிகவும் சிறந்த உணவு. இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும். செரிமானம், வயிற்று புண்கள் மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
மிகவும் ஆரோக்கியமான பேபி உருளைக்கிழங்கு கறி.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பேபி உருளைக்கிழங்கு கறி
» பேபி உருளைக்கிழங்கு கறி
» ஜுராஸிக் பேபி
» பேபி பீட்சா பேபி பீட்சா
» உருளைக்கிழங்கு கறி
» பேபி உருளைக்கிழங்கு கறி
» ஜுராஸிக் பேபி
» பேபி பீட்சா பேபி பீட்சா
» உருளைக்கிழங்கு கறி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum