கதம்ப குருமா
Page 1 of 1
கதம்ப குருமா
தேவையான பொருள்கள்:
காய்கறிகள்(நறுக்கியவை கலவையாக ) = 2 கப்
பச்சை மிளகாய் = 6
இஞ்சி = அரையங்குலம்
தக்காளி = கால் கிலோ
வெங்காயம் = 100 கிராம்
தேங்காய் = 1
ஏலக்காய் = 4
மிளகாய் பொடி = ஒன்றரை ஸ்பூன்
தனியா பொடி = 3 ஸ்பூன்
மஞ்சள் பொடி = சிறிதளவு
பட்டை = 2
சோம்பு = 1 ஸ்பூன்
கிராம்பு = 3
அன்னாசிப்பூ = 2
மிளகாய் வற்றல் = 2
ஜாதிக்காய் பொடி = அரை ஸ்பூன்
எண்ணெய் = 4 ஸ்பூன்
நெய் = 2 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு டபுள் பீன்ஸ், பச்சை பட்டாணி, காலிஃப்ள்வர் போன்ற காய்கறிகளை ஒரே அளவாக நறுக்கி 2 கப் எடுத்துக் கொள்ளவும். இஞ்சியை மெல்லிய குச்சியை போல் நறுக்கவும். பச்சை மிளகாய் இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளி, வெங்காயம் நீளவாக்கில் நறுக்கவும்.
தேங்காயைத் துருவி ஏலக்காயோடு அரைத்து முதல் பால், இரண்டாம் பால் எடுக்கவும். இதில் முதல் பாலில் காய்கறிகளையும் இஞ்சி, தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், மிளகாய் பொடி, தனியா பொடி, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து ஒரு கப் தண்ணீரில் விட்டு மூடி கொதிக்க விடவும்.
நன்றாகக் கொதித்து பொடி வாசனை நீங்க வேண்டும். இதில் இரண்டாம் பால் விட்டு இறக்கி கொத்தமல்லி, ஜாதிக்காய் பொடி தூவவும்.
எண்ணெயில் தட்டிய பட்டை, சோம்பு, கிராம்பு சேர்த்து மிளகாய் வற்றல், கறிவேப்பிலையோடு தாளித்து கடைசியாக நெய் விட்டுக் கிளறி இறக்கவும்.
சுவையான கதம்ப குருமா தயார். இதை ரைஸ், சப்பாத்தி, பரோட்டா, பூரி, வெஜிடபிள் ரைஸ், பிரியாணி, இட்லி, தோசை, அடை, ஆப்பம் போன்றவற்றோடு பரிமாறலாம்.
மருத்துவ குணங்கள்:
கேரட்டில் வைட்டமின்கள் A, B, C, D, E, G, K மற்றும் கால்சியம், தாமிரம், அயோடின், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீஸ், பொட்டாசியம், சோடியம் மற்றும் சல்பர் உள்ளது. இது குறிப்பாக கண்புரை மற்றும் இதர கண் பிரச்சினைகள் குறையும்.
உடலுக்கு சக்தியளிக்கிறது. இது இரத்த சோகை, இரத்த ஓட்ட பிரச்சினைகள் மற்றும் தோல் நோய்களை குறைக்கும். செரிமான பிரச்சினை மற்றும் புண்கள், ஆஸ்துமா போன்றவை குறையும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum