கொண்டைக் கடலை குழம்பு
Page 1 of 1
கொண்டைக் கடலை குழம்பு
தேவையான பொருட்கள்:
கொண்டைக் கடலை – ஒரு கப்
தக்காளி – 1
வெங்காயம் – 1
பூண்டு – 2
இஞ்சி – அரை துண்டு
கறிவேப்பிலை – சிறிதளவு
தேங்காய் – 2
கடுகு– ஒரு டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு– ஒரு டீஸ்பூன்
சீரகம்– ஒரு டீஸ்பூன்
தனியாத்தூள் – ஒரு டீஸ்பூன்
புளி – நெல்லிக்காய் அளவு
மஞ்சள் பொடி – அரை டீஸ்பூன்
மிளகாய்– ஒரு டேபிள்ஸ்பூன்
எண் ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். தேங்காய், சீரகத்தை விழுதாக அரைக்கவும்.
கறுப்பு கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊற வைத்து, மறுநாள் குக்கரில் வேக வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து அதனுடன் பூண்டு, இஞ்சி, வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
இதனுடன் தேங்காய்-சீரக விழுதை சேர்த்து, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாதூள், உப்பு, வெந்த கொண்டைக்கடலையைப் போட்டு, புளியைக் கரைத்து ஊற்றி, நன்றாகக் கொதித்ததும் இறக்கவும்.
இப்பொழுது கொண்டைக்கடலை புளிக் குழம்பு தயார். இதை சாதம், சாப்பாத்தி, இட்லி, தோசை, ஆப்பம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.
மருத்துவக் குணங்கள்:
கொண்டைக் கடலை எனப்படும் மூக்கடலையில் புரதம், இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து மற்றும் பல வைட்டமின்களும், ஊட்டச்சத்துகளும் உள்ளன.
மூக்கடலை சுண்டல் சாப்பிட்டு வந்தால் நரம்புகள் பலமடையும், உடல் உறுதியாகும்.
கடலையை அரைத்துப் பாலில் கலந்து குடித்தால் சீதக் கழிச்சல் குறையும்.
பச்சைக் கொண்டைக் கடலையை ஊறவைத்து சாப்பிட்டால் சளி, இருமல் குறையும்.
நுரையீரல் தொடர்பான நோய்களும் குறையும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கொண்டைக் கடலை குழம்பு
» கொண்டைக் கடலை குழம்பு
» கொண்டைக் கடலை மசாலா
» வெள்ளைக் கொண்டைக் கடலை வடை
» கொண்டைக் கடலை சுண்டல்
» கொண்டைக் கடலை குழம்பு
» கொண்டைக் கடலை மசாலா
» வெள்ளைக் கொண்டைக் கடலை வடை
» கொண்டைக் கடலை சுண்டல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum