தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கமல் சார் நினைச்சா முடியும்… மனக்குமுறலில் மாணவர்கள்

Go down

கமல் சார் நினைச்சா முடியும்… மனக்குமுறலில் மாணவர்கள் Empty கமல் சார் நினைச்சா முடியும்… மனக்குமுறலில் மாணவர்கள்

Post  ishwarya Fri Apr 12, 2013 5:54 pm

சென்னை புரசைவாக்கத்தில் இருக்கிறது அந்த பள்ளி. இங்கு கூட்டம் கூட்டமாக வாசலில் உட்கார்ந்து கொண்டு கோஷம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் மாணவர்கள். இவர்களோடு சேர்ந்து கொண்டு இப்பள்ளியில் படித்த பழைய மாணவர்களும் கோதாவில் குதிக்கிறார்கள்.

அவர்களில் பலர், வாங்க கமல் சார் வீட்டுக்கு போகலாம். அவரையும் வரவழைப்போம் என்று பேசியதுதான் ஆச்சர்யம். அதை தெரிந்து கொள்வதற்கு முன் ஏன் இந்த போராட்டம் என்பதை தெரிந்து கொள்வது ரொம்ப ரொம்ப முக்கியம்.

130 ஆண்டுகள் பழைமை வாய்ந்த எம்.சி.டி.எம் பள்ளியில்தான் இத்தனை குழப்பமும். திடீரென்று இந்த பள்ளியை மூடி விட நினைக்கிறதாம் நிர்வாகம். இங்கு படித்த பழைய மாணவர்கள் பலர் சமுதாயத்தில் பெரிய அந்தஸ்தில் இருக்கிறார்கள். அவர்களின் கவனத்திற்கு இந்த விஷயத்தை கொண்டு செல்ல வேண்டும் என்று போராடுகிற மாணவர்கள்தான் கமல் விஷயத்தையும் உள்ளே சேர்த்து கவனிக்க வைத்தார்கள்.

சிறுவயதில் இந்த பள்ளியில்தான் படித்தாராம் கமல். பழைய மாணவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கமல்சாரை பார்க்கலாம். அவர் மனது வைத்தால் இந்த விஷயத்தை முதல்வர் வரைக்கும் கொண்டு சென்று ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை காப்பாற்றலாம் என்கிறார்கள் அவர்கள்.

அவர்களுக்கு முன் கமலுக்கு விஷயத்தை கொண்டு செல்லலாமே என்பதற்காகதான் இந்த பதிவு.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» முடிவை மறுபரிசீலனை பண்ணுங்க கமல் சார்! – திரையரங்க உரிமையாளர்கள்
» ஈழப் போராட்டத்தில் மாணவர்கள் : கமல் வெளிப்படையான கருத்து.
» இலங்கை பிரச்சினை: வேலூரில் ஐ.டி.ஐ. மாணவர்கள்-வணிகர்கள் ஆர்ப்பாட்டம்இலங்கையில் தனிஈழம் அமைக்க வாக்கெடுப்பு நடத்த கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேலூர் அடுத்த அப்துல்லாபுரம் ஐ.டி.ஐ. மாணவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் இன்று மறியல் செய்தனர். அப்போது
» ‘கொஞ்சம் பொறுங்க ரஜினி சார்!’ – டாக்டர்கள் அட்வைஸ்
» ‘அன்புள்ள கமல்’ படத்தில் ரஜினி பற்றி கமல்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum