தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சோனியா அகர்வால் நடிக்கும் படத்தில் செல்வராகவனை விமர்சிக்கவில்லை: இயக்குனர் ராஜ்கிருஷ்ணா மறுப்பு

Go down

சோனியா அகர்வால் நடிக்கும் படத்தில் செல்வராகவனை விமர்சிக்கவில்லை: இயக்குனர் ராஜ்கிருஷ்ணா மறுப்பு Empty சோனியா அகர்வால் நடிக்கும் படத்தில் செல்வராகவனை விமர்சிக்கவில்லை: இயக்குனர் ராஜ்கிருஷ்ணா மறுப்பு

Post  ishwarya Fri Apr 12, 2013 5:45 pm

“ஒரு நடிகையின் வாக்கு மூலம்” என்ற பெயரில் நடிகர், நடிகைகளின் நிஜ வாழ்க்கை கதை படமாகிறது. இந்த படத்தை ராஜ்கிருஷ்ணா இயக்குகிறார். இதில் பாதிக்கப்படும் நடிகை கேரக்டரில் சோனியா அகர்வால் நடிக்கிறார்.

நடிகையான பிறகு அவர் சந்திக்கும் கஷ்டங்கள் மற்றும் திருமண வாழ்க்கை விவாகரத்து போன்றவை இதில் காட்சிபடுத்தப்படுகின்றன. சோனியா அகர்வாலின் சொந்த வாழ்க்கையே இந்த படம் என்றும் கணவர் வேடத்தில் நடிக்க செல்வராகவன் தோற்றத்தில் நடிகர் தேடுவதாகவும் செய்திகள் வெளியாயின.

இதுகுறித்து இயக்குனர் ராஜ்கிருஷ்ணாவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:

நான் நிறைய நடிகைகளை சந்தித்து இருக்கிறேன். அவர்கள் பட்ட சிரமங்களை நேரில் அறிந்தும் இருக்கிறேன். அதை “ஒரு நடிகையின் வாக்குமூலம்” என்ற பெயரில் படமாக எடுக்கிறேன். ஒவ்வொரு நடிகையின் வாழ்வில் நடந்த ஓரிரு சம்பவங்கள் இப்படத்தில் இருக்கும். அப்படி எல்லா நடிகைகளும் சந்தித்த நிகழ்வுகள் இப்படத்தில் தொகுக்கப்பட்டு உள்ளது.

இப்படம் முழுக்க சோனியா அகர்வாலின் வாழ்க்கை கதை அல்ல. கதை கேட்டபோது, என் வாழ்க்கையிலும் இதுபோன்று ஓரிரு சம்பவங்கள் நடந்துள்ளன என்றார். சோனியா அகர்வால் நடிப்பதால் அவரது சொந்த வாழ்க்கை படமாக்கப்படுவதாக ஒரு “இமேஜ்” பரவி உள்ளது. அவர் வாழ்க்கையில் நடந்தவை இரண்டு சீன்களில் தான் இருக்கும்.

செல்வ ராகவன் போன்று இப்படத்தில் ஒரு கேரக்டரை உருவாக்கி இருப்பதாக வெளியான செய்தியிலும் உண்மை இல்லை. நடிகைகளான எனது சகோதரிகளை புண்படுத்தும் காட்சிகள் இப்படத்தில் இருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சம்பள பிரச்சினையால் நடிக்க மறுப்பு நடிகை நிக்கோல் ஓட்டம்: இயக்குனர் ராஜ்கிருஷ்ணா புகார்
» பிரகாஷ் ராஜ் மனைவியாக சோனியா அகர்வால் – சிம்பு படத்தில் மறுபிரவேசம்
» ஒப்பந்தமான படத்தில் நடிக்க மறுப்பு: பிருதிவிராஜ் மீது இயக்குனர் புகார்
» எப்படி இருந்த சோனியா அகர்வால்…!
» இசைப்பள்ளி தொடங்கிய சோனியா அகர்வால்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum