தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?

Go down

அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா? Empty அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?

Post  ishwarya Fri Apr 12, 2013 5:39 pm

அஜித்…….எந்த ஒரு சினிமா நடிகர்களையும் முன்னுதாரணமாக கொள்ளக்கூடாது என்ற கொள்கையை எவ்விடத்திலும் வலியுறுத்தும் என் கருத்தை உடைத்தெறிந்த ஒரு நடிகர் அஜித். ஒரு நடிகர் என்பதையும் தாண்டி ஒரு நல்ல மனிதர். கொழுகொம்பு இன்றி வளர்ந்த கொடி அஜித்.

தமக்கிருக்கும் பிரபல்யத்தை பயன்படுத்தி எதை வேண்டுமானாலும் செய்யத்துணிபவர்களுக்கு மத்தியில், தன் பிரபல்யத்தையே ஒதுக்கி வைத்து விட்டு தானும் ஓர் சராசரி குடிமகன் தான் என்று வாழ்ந்து வருபவர்.மேலே உள்ள படத்தை பார்த்தாலே புரியும். வாக்களிக்க செல்லும்போதுகூட மக்களோடு மக்களாக நின்று வாக்களித்துவிட்டு வருபவர்.

இதுவரையான தமிழ் சினிமா வரலாறு அஜித் போன்ற உன்னதமான ஒரு மனிதரை கண்டிருக்குமா என்பது கேள்வியே. ஒருவேளை சிலர் பார்வைக்கு அஜித் சாதாரணமாக தெரியலாம். ஆனால் என்னைப்பொறுத்த வரை அஜித் ஒரு மாமனிதன் என்று சொல்வதில் கூட தவறில்லை. மாமனிதன் என்று சொல்வதற்கு அவர் அப்படி என்ன செய்தார் என்று கேட்கிறீர்களா?.. இன்று ஒரு சாதாரண பதவியில் இருந்தாலோ, சிறிய புகழை அடைந்தூவிட்டாலோ அதை வைத்து அட்டூழியம் செய்பவர்களுக்கு மத்தியில் எவ்வளவோ பெரிய பெயர் புகழை அடைந்திருந்தும் அதை ஓரமாக தள்ளி வைத்துவிட்டு வாழ்ந்து வருகிறாரே, அது போதாதா?.

அஜீத் அதிரடியாக தன் ரசிகர் மன்றங்களை கலைத்தபோது அது பற்றி பல்வேறு தகவல்கள் வந்தன. ரசிகர்களின் வாழ்க்கையை பாழாக்கக்கூடாது என்றுதான் அந்த முடிவை எடுத்தார் என்றும், தன் பேச்சை கேட்காமல் தேர்தலில் தி.மு.க விற்கு ஆதரவு வழங்கினார்கள் என்பதால்தான் கலைத்தார் என்றும் பல்வேறு தகவல்கள் வந்தன. இருந்தபோதும் அந்த செயல் பலரது மனதிலும் அஜித் மீது ஒரு மரியாதையை ஏற்படுத்தியிருந்தது.

அந்த துணிச்சல் தமிழ் ஹீரோக்களுக்கு இதுவரை வந்ததுமில்லை. இனிமேல் வரப்போவதுமில்லை.

அதன் பின்னர் மங்காத்தா வெளியீட்டுக்கு சிக்கல் ஏற்பட்டபோது பலரும் ஜெயலலிதாவை சந்திக்கும்படி வற்புறுத்தினார்கள். அதை அடியோடு மறுத்த அஜித் “ இப்போது சென்று சந்தித்தால் அது சுயநலமாகிவிடும்” என்று கூறியிருந்தார். அது அவர் மீதான மரியாதையை இன்னும் அதிகப்படுத்தியது.

கண்டிப்பாக அஜித் என்ற நடிகனை விட்டு அஜித் என்ற மனிதனை முன்னுதாரணமாக கொள்ளலாம். அதில் தவறேதும் இல்லை.

மங்காத்தா வெற்றிக்குப் பின்னர் தல காட்டில் மழை அடிக்கத்தொடங்கிவிட்டது. அடுத்து பில்லா 2 விலும் அதற்கடுத்து ஜெயம் ராஜா அல்லது ஷங்கரின் இயக்கத்தில் பெரிய பட்ஜெட் படத்திலும் நடிக்கவிருக்கிறார். தல தொடர்ந்து வெற்றிவாகை சூட வாழ்த்துக்கள்

அஜித் விஜய் ரசிகர்களின் மோதல்

அண்மைக்காலமாக விஜய் ரசிகர்களுக்கும் அஜித் ரசிகர்களுக்கும் இடையில் பலத்த கருத்துமோதல் இடம்பெற்று வருகிறது. இது நீண்ட காலமாகவே இடம்பெற்று வந்தாலும் இப்போது கொஞ்சம் அதிகரித்துள்ளது. காவலன் வந்தபோது அஜித் ரசிகர்களும் மங்காத்தா வந்தபோது விஜய் ரசிகர்களும் மாறிமாறி தங்கள் குரோதங்களை கொட்டிக்கொண்டார்கள். இவர்கள் திருந்தப்போவதுமில்லை.

ஆனால் காவலனை புகழ்ந்த அஜித் ரசிகர்களும் இருக்கிறார்கள். மங்காத்தாவை புகழ்ந்த விஜய் ரசிகர்களும் இருக்கிறார்கள். அஜித், விஜய் இருவருமே பெரியவர்கள் தான். இங்கே போட்டிக்கு இடமில்லை. இதை அவர்களே உணர்ந்து நண்பர்களாக இருக்கும்போது ரசிகர்கள் மட்டும் மோதிக்கொள்வதில் அர்த்தமில்லை

இவர்களெல்லாம் எப்போது அஜித், விஜய் ரசிகர்களாக அல்லாமல் சினிமா ரசிகர்களாக மாறுகின்றார்களோ அன்றுதான் தமிழ் சினிமா உலகம் உருப்படும்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பெரிய நடிகர் என்ற பந்தா இல்லாதவர் அஜித்! ஒளிப்பதிவாளர் ராஜசேகர்
» லிப் கிஸ் என்ன அவ்வளவு பெரிய தப்பா…? அஞ்சலி கேள்வி!!
»  சில ஆண்டுகளாகவே எனக்கு சொந்தத் தொழிலில் பெரிய இழப்பு. மீண்டும் தொழிலில் அபிவிருத்தி அடைய என்ன செய்ய வேண்டும்?
» நடிகைகள் – ரசிகைகள் விஷயத்தில் ‌கோலிவுட் என்ன…? பாலிவுட்ட என்ன…?
» செவ்வாய் தோஷம் என்றால் என்ன? விதிவிலக்குகள் உண்டா? பரிகாரம் என்ன?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum