ஒரே ஒரு படம் – ஒரு வருஷம் கால்ஷீட் !
Page 1 of 1
ஒரே ஒரு படம் – ஒரு வருஷம் கால்ஷீட் !
சூர்யா, ஸ்ருதிஹாசன் நடிப்பில் தீபாவளி தினத்தன்று வெளிவர இருக்கும் படம் ‘ஏழாம் அறிவு’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருக்கிறார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் ஹாரிஸ் ஜெயராஜ் இசை வெற்றி பெற்று இருப்பதை முன்னிட்டு அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின். சூர்யா, ஸ்ருதிஹாசன், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், ஹாரிஸ் ஜெயராஜ், தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் இப்பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்றனர்.
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் : ” நானும், சூர்யாவும் திரும்பவும் படம் பண்ண வேண்டும் என முடிவு எடுத்தவுடன், பல்வேறு கதைகளை யோசித்து இறுதியாக முடிவு செய்து ஆரம்பிக்கப்பட்ட படம் ‘ஏழாம் அறிவு’. இப்படம் உருவாக காரணமாக இருந்த உதயநிதி ஸ்டாலினுக்கு எங்களது படக்குழுவினர் சார்பில் வணக்கம் கலந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இந்த படத்திற்காக ஒரு வருடம் கால்ஷீட் கொடுத்தார் சூர்யா. எந்த ஒரு நடிகரும் தொடர்ச்சியாக தேதிகள் கொடுக்க மாட்டார்கள். ஒரு வருடத்தில் அவர் நினைத்தால் இரண்டு படங்களில் நடித்து இருக்கலாம். ஏனென்றால் இரண்டு சம்பளம் கிடைத்து இருக்கும். ஆனால் அவர் “நீங்கள் உங்கள் தேதிகள் போதும் சொன்ன உடனே அடுத்த படத்திற்கு தேதிகள் கொடுக்கிறேன் சார்” என்று கூறினார்.
இந்தியாவில், அதுவும் தமிழ்நாட்டில் பிறந்த ஒருவர் சீனாவிற்கு சென்று இருக்கிறார். அவரை மக்கள் அங்கு தெய்வமாக வழிப்பட்டு வருகிறார்கள். அங்கு உள்ள சின்ன குழந்தைகளை கேட்டால் கூட ‘தாமு தாமு’ என்று கூறுகிறார்கள். அவருடைய வரலாறு இங்கு இருட்டடிக்கப்பட்டுள்ளது. இது நமக்கு எவ்வளவு பெரிய அவமானம். கண்டிப்பாக இந்த படம் வெளிவந்த உடன் அனைவரும் இவர் யார் என்பதை இணையத்தில் தேடுவார்கள்.
6ம் நூற்றாண்டு கதை முதல் 20 நிமிடங்கள் வரும். அடுத்து படத்தின் கதை DNA போன்ற உண்மையான சம்பவங்களுடன் கொஞ்சம் கற்பனை கலந்த கமர்ஷியல் படம் தான் ‘ஏழாம் அறிவு’. அடுத்து, என்னோட இணை இயக்குனர்கள்.. அவர்களுக்கு நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். அவர்களுக்கு நான் என்ன கைமாறு செய்ய போகிறேன் என்று தெரியவில்லை. நான் இயக்கிய ‘கஜினி’ படம் MOMENTO படத்தின் தழுவல் என்று கூறினார்கள். ‘ஏழாம் அறிவு’ படம் எந்த ஒரு படத்தின் தழுவலும் இல்லை. வேண்டுமென்றால் இந்த படத்தின் ரீமேக்கை HOLLYWOODல் எடுப்பார்கள்.
படக்குழுவினர் அனைவருக்கும் இந்த சமயத்தில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.”
சூர்யா : ” எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. ‘ஆதவன்’ படத்தின் ஷுட்டிங் நடைபெற்று கொண்டிருக்கும் போது உதயநிதியிடம் “சார்.. முருகதாஸ் தமிழ் சினிமாவிற்கு திரும்புற மாதிரி இருக்கு. நான் வேண்டுமென்றால் பேசுறேன். ஒரு படம் பண்ணலாமா சார் ” என்று கேட்டேன். அப்படி ஆரம்பானது தான் ‘ஏழாம் அறிவு’. அதற்கு பிறகு என்ன நடந்தது என்று எல்லாருக்கும் தெரியும்.
முருகதாஸ் மூன்று கதைகளை வைத்து இருந்தார். மூன்றுமே பிரமாதமான கதைகள். அவற்றை எல்லாம் ஓரமாக வைத்து விட்டு ஆரம்பித்த கதை தான் ‘ஏழாம் அறிவு’.
காஞ்சிபுரத்தில் வாழ்ந்த போதிதர்மன் என்பவரின் வாழ்க்கை வரலாறு இருட்டடிக்கப்பட்டுள்ளது. அவருடைய கதையின் ஒரு சிறு தொகுப்பே ‘ஏழாம் அறிவு’. இந்த படத்திற்காக நிறைய ஆராய்ச்சி செய்து கதையை வடிவமைத்து இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.
சீனா, தாய்லாந்து போன்ற நாடுகளில் போய் படப்பிடிப்பு நடத்தி இருக்கிறோம். சீனாவில் போய் எல்லாரும் பாடல் காட்சிகள் எடுப்பார்கள். நாங்கள் அங்கு போய் 15 நாட்கள் தங்கிருந்து சில காட்சிகளை படமாக்கி இருக்கிறோம். SHAOLIN TEMPLEல் படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம் இது தான். ”

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விஜய்யின் கால்ஷீட் சௌத்ரிக்கு இல்லை
» 10 வருஷம் தாக்கு பிடிப்பதென்றால் சும்மாவா? நடிகை த்ரிஷா
» யானைகளுடன் ஒரு வருஷம்… – பிரபு மகனின் கும்கி அனுபவம்
» ஐஸ்வர்யா கால்ஷீட் சொதப்பல் – தாமதமாகும் எந்திரன்!
» கால்ஷீட் பிரச்சினை… 3 இடியட்ஸிலிருந்து விஜய் விலகல்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum