லவ்வர்ஸ் ஏரியாவில் கவிஞர் தாமரை!
Page 1 of 1
லவ்வர்ஸ் ஏரியாவில் கவிஞர் தாமரை!
விண்ணை தாண்டி வருவாயா, கோ என வெற்றிப்படங்களை தயாரித்த எல்ரெட் குமார், அடுத்து தயாரித்திருக்கும் படம் முப்பொழுதும் உன் கற்பனைகள். இதில் இன்னொரு விசேஷமும் உண்டு. இப்படத்தை இயக்கியிருப்பதும் அதே தயாரிப்பாளர் குமார்தான்! பணம் இருக்கிறவர்கள் எல்லாருமே ஸ்டார்ட், கட் சொல்ல ஆரம்பித்தால் சினிமா என்னாகும்? இந்த கேள்விக்கு நடிகர் ஜீவா பேசியதையே உதாரணமாக சொன்னால்தான் சரியாக இருக்கும்.
முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தின் ஒரு பாடலை மட்டும் வெளியிட்டார்கள். ஜீவா வெளியிட வெற்றிமாறன் பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில்தான் குமாரின் திறமையை பார்வையாளர்களிடம் கொட்டினார் ஜீவா. கோ படத்தின் கதையை என்னிடம் சொன்னதே குமார்தான். ரொம்ப சுவாரஸ்யமாக கதை சொல்வார் அவர். இந்த கதையும் எனக்கு தெரியும். ஒரு தயாரிப்பாளரா எப்படி ஜெயித்தாரோ, ஒரு டைரக்டராகவும் அவர் ஜெயிப்பார். இப்போ வெளியிடப்பட்ட இந்த பாடலை முதல் சில வரிகளை கேட்டவுடனேயே பக்கத்திலிருக்கிற ஜீ.வி.பிரகாஷுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பிட்டேன். பாட்டு சூப்பர்னு. வரிகளும் ரொம்ப நல்லா எழுதியிருக்காங்க தாமரை என்றார் ஜீவா.
இவர் சாதாரணமாக பாராட்டிவிட்டு போய்விட்டாலும், அந்த பாடலை எவ்வளவு சிரமப்பட்டு எழுதினேன் என்று விளக்கினார் தாமரை. காதலர்கள் தங்களுக்குள் பரிசு கொடுத்துக் கொள்வதைப் போன்ற சூழ்நிலை அது. நானும் என் காலத்தில் இருக்கிற காதலர்களை மனதில் வைத்துக் கொண்டு எழுதினேன். கடைசியில்தான் தெரிந்தது. அந்த வழக்கமெல்லாம் இந்த காலத்தில் இல்லவே இல்லை என்று. இப்போதுள்ள காதலர்களுக்கு ஏற்ற மாதிரி எழுதுங்க என்று கூறிய டைரக்டர் தயாரிப்பு நிர்வாகிகளுடன் எனக்கு தனியா ஒரு கார் கொடுத்து சென்னையை சுற்றிப்பார்க்க அனுப்பி வைத்தார்.
எஸ்கேப், சத்யம், ஸ்கை வாக் என்று காதலர்கள் கூடுகிற இடத்திற்கெல்லாம் என்னை அழைத்துப் போனார்கள் அவர்கள். நானும் இந்த இடத்தையெல்லாம் இப்போதுதான் பார்க்கிறேன். ஒருவழியாக அங்கு விற்கப்படும் பரிசு பொருட்களையெல்லாம் குறிப்பெடுத்துக் கொண்டபின் நான் எழுதிய பாடல் அது என்று பாடல் பிறந்த கதையை சுவாரஸ்யமாக சொல்லி முடித்தார் தாமரை.
பொதுவா தயாரிப்பாளர்களிடம் இசையமைப்பாளர்கள்தான் சார் எங்காவது வெளிநாட்டுக்கு போய் சாங் கம்போஸ் பண்ணலாமா என்று கேட்பார்கள். ஆனால், இந்த படத்தின் தயாரிப்பாளர் குமார், கம்போசிங்குக்கு சீனா போகலாமா என்று என்னை முந்திக் கொண்டு கேட்டதுடன் அங்கே அழைத்துக் கொண்டும் போனார் என்றார் ஒரு குழந்தையை போல.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ‘ராஜபக்சே தூது… தூக்கியெறிந்த ரஜினி!’ – கவிஞர் தாமரை
» த லவ்வர்ஸ் பார்க்
» தனுஷின் 3 படம் ஆந்திராவில் சாதனை: ஒரு ஏரியாவில் மட்டும் ரூ.3 கோடிக்கு விற்பனை!!
» வந்தார் தாமரை
» ஆகாசத் தாமரை
» த லவ்வர்ஸ் பார்க்
» தனுஷின் 3 படம் ஆந்திராவில் சாதனை: ஒரு ஏரியாவில் மட்டும் ரூ.3 கோடிக்கு விற்பனை!!
» வந்தார் தாமரை
» ஆகாசத் தாமரை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum